வாஷிங்டன்,ஹிந்து வெறுப்புணர்வை கண்டித்து அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாண சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் இந்தியர்கள், குறிப்பாக ஹிந்துக்கள் அதிகளவில் உள்ளனர்.
அமெரிக்க மாகாணங்களிலேயே முதல் முறையாக இங்கு, ஹிந்து வெறுப்பைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது:உலகெங்கும், ௧௦௦க்கும் மேற்பட்ட நாடுகளில், 120 கோடிக்கும் மேற்பட்டோர் பின்பற்றும், உலகின் மிகப் பெரிய மற்றும் பழமையான மதமாக ஹிந்து மதம் உள்ளது.
தனிமனித ஒழுக்கத்தை பின்பற்றுவது, பரஸ்பரம் மற்றவரை மதித்தல், அமைதி ஆகியவை ஹிந்து மதத்தின் அடிப்படையாகும்.மருத்துவம், அறிவியல், பொறியியல், தகவல் தொழில்நுட்பம் என, பல துறைகளில் அமெரிக்க வாழ் ஹிந்துக்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.
யோகா, ஆயுர்வேதம், தியானம், இசை, கலை என, கலாசாரத்துடன் இணைந்த ஹிந்து மதத்தினர், இந்த உலகின் நன்மைக்காக பெரிதும் பங்களிப்பு அளித்து வருகின்றனர். ஆனால், அமெரிக்க வாழ் இந்தியர்கள், குறிப்பாக ஹிந்துக்களுக்கு எதிரான ‘ஹிந்துபோபியா’ எனப்படும், ஹிந்து பயம், ஹிந்து வெறுப்பு நிகழ்வுகள் அதிகம் நடந்து
வருகின்றன.இதைக் கண்டித்து இந்த தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.