ரிஷிகளாலும் வேதங்களாலும் உருவானது தான் இந்தியா! ராஜபாளையத்தில் ஆளுநர் ரவி பேச்சு!

விருதுநகர்: ரிஷிகளாலும் வேதங்களாலும் உருவானது தான் இந்தியா என ராஜபாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஆளுநர் ரவி பேசியிருக்கிறார்.

இந்தியா ராஜாக்களால் உருவாக்கப்பட்டதில்லை என்பதையும் அவர் தெரிவித்திருக்கிறார்.

ரிஷிகளிடம் இருந்தும் வேதங்களில் இருந்தும் கிடைத்த அறிவொளி தான் மக்களை வழிநடத்துவதாகவும் கூறியிருக்கிறார்.

ஆளுநர் ரவி

ஆளுநர் ரவியின் பேச்சுக்களும் கருத்துக்களும் அவ்வப்போது மிகுந்த பரபரப்பை உருவாக்கும். கடந்த அக்டோபர் மாதம் சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, நமது ஆன்மிகத்தின் ஆதாரம் திருக்குறள் என்று கூறியிருந்தார். திருவள்ளுவர் திருக்குறளில் எந்த மதத்தைப் பற்றியோ, மொழியைப் பற்றியோ, இறை வழிபாட்டைப் பற்றியோ குறிப்பிடாத போது ஆன்மிகத்துக்கும் குறளுக்கும் என்ன சம்பந்தம் என கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட தலைவர்கள் கடுமையாக எதிர் வினையாற்றினர்.

ஸ்ரீ ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த பாரதி

ஸ்ரீ ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த பாரதி

இதேபோல் சனாதனம் குறித்த ஆளுநரின் கருத்துக்கு டி.ஆர்.பாலு மிக காட்டமான பதிலடி கொடுத்திருந்தார். இந்நிலையில் ராஜபாளையத்தில் உள்ள ஸ்ரீ ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த பாரதி வேத பாடசாலையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஆளுநர் ரவி, ரிஷிகளாலும் வேதங்களாலும் உருவானது தான் இந்தியா எனவும் இந்தியா ராஜாக்களால் உருவாக்கப்பட்டதில்லை என்றும் கூறியிருக்கிறார்.

கலந்துரையாடல்

கலந்துரையாடல்

மேலும், ஸ்ரீ ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த பாரதி வேத பாடசாலையில் பயிலும் மாணவர்களுடன் சிறிது நேரம் ஆளுநர் ரவி கலந்துரையாடினார். இதுமட்டுமல்லாமல் அவர்களுடன் ஆர்வமாக குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டார். முன்னதாக ஆளுநர் ரவியின் ராஜபாளையம் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்புக் கொடி போராட்டம் நடத்தினர்.

ஸ்ரீவில்லிபுதூர் ஆண்டாள் கோயில்

ஸ்ரீவில்லிபுதூர் ஆண்டாள் கோயில்

முன்னதாக ஸ்ரீவில்லிபுதூர் ஆண்டாள் கோயிலுக்கு தனது மனைவியுடன் சென்ற ஆளுநர் ரவி அங்கு வழிபாடு நடத்தினார். அங்கு அவருக்கு முதல் மரியாதை கொடுக்கப்பட்டு வரவேற்கப்பட்டதுடன் ஆண்டாள் கோயில் யானை ஆசிர்வாதமும் செய்தது.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.