சென்னை: காரைக்கால் கைலாசநாதர் கோயில் பங்குனி திருவிழாவின் அனைத்து நாட்களிலும் சுவாமி ஊர்வலம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. சுவாமி ஊர்வலத்தை தடுப்போர் மீது இரக்கம் காட்டாமல் நடவடிக்கை எடுக்கவும் புதுச்சேரி அரசுக்கு கோர்ட் ஆணையிட்டுள்ளது. அமைதியான முறையில் ஊர்வலம் நடைபெற தேவையான பாதுகாப்பு அளிக்கவும் காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 10 நாள் நடைபெறும் பங்குனி உத்திர விழாவில் 1, 9, 10ம் நாளில் சுவாமி உலா என்ற அறிவிப்பை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டிருந்தது.