சென்னை : விருது வழங்கும் விழாவில் இயக்குநர் நெல்சனை பவுன்ஸர்கள் அவமானப்படுத்தும் விதமாக நடந்து கொண்டதால் நெட்டிசன்ஸ் கடுமையான கோவத்தை இணையத்தில் வெளிப்படுத்தி வருகின்றனர்.
கோலமாவு கோகிலா, டாக்டர் திரைப்படத்தை மாபெரும் வெற்றிப்படமாக்கிய நெல்சன் தளபதி விஜய்யை வைத்து பீஸ்ட் என்ற படத்தை இயக்கி இருந்தார்.
பீஸ்ட் திரைப்படத்தின் டிரைலரிலேயே படத்தின் மொத்த கதையும் தெரிந்துவிட்டதால், இது என்ன யோகிபாபு நடித்த கூர்கா திரைப்படம் போல இருக்கு என்று அப்போதே ரசிகர்கள் கிண்டலடிக்கத் தொடங்கினர்.
இயக்குநர் நெல்சன்
நெல்சன் இது கூர்கா படம் இல்லை, இப்படத்தின் கதையை வேறு என படம் வெளியாவதற்கு முன்பே தெளிவாக கூறியிருந்தார். இதையடுத்து, திரையரங்கில் பீஸ்ட் படத்தை பார்த்த ரசிகர்கள், விஜயை எந்த மாதிரி எல்லாம் காட்டக் கூடாதோ அப்படியெல்லாம் வச்சி செய்துவிட்டார் என நெல்சனை கடுமையாக திட்டினர்.
பெருத்த அடி
மேலும் இந்த படம் வெளியான மறு நாளே கே.ஜி.எஃப் 2 படம் ரிலீஸானதால், அந்த படம் பீஸ்ட் படத்தை முழுசாக காலி பண்ணிவிட்டது. தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 800க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தை, இரண்டு நாட்களிலேயே திரையரங்கிலிருந்து தூக்கிவிட்டனர். இதனால், பீஸ்ட் திரைப்படத்திற்கு பெருத்த அடி.
ஜெயிலர் படத்தில் பிஸி
பீஸ்ட் திரைப்படத்தைப்பார்த்து மிகவும் கடுப்பான இணையவாசிகள் நெல்சனை பங்கமாக கலாய்த்தனர். பீஸ்ட் படம் வெளியாவதற்கு முன்பே தலைவர் 169 திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை நெல்சன் பெற்றதால், அப்படத்தை எப்படி எடுக்கப்போகிறார் என்று ரசிகர்கள் கண்ணில் விளக்கு எண்ணெய் ஊற்றிக்கொண்டு பார்த்து வருகின்றனர். ரஜினியின்169வது படத்திற்கு ஜெயிலர் என தலைப்பு வைக்கப்பட்டு படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இத்திரைப்படம் பான் இந்தியத் திரைப்படமாக வெளியாக உள்ளது.
நெல்சனை கட்டுக்கவில்லை
இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட நெல்சன் அங்கிருந்த பவுன்ஸர்களால் அவமானப்படுத்தப்பட்டுள்ளார். அதாவது நெல்சன் விருது வழங்கும் விழாவிற்கு வந்த போது அங்கிருந்த பவுன்ஸர்கள், கேமிரா மேன், ரிப்போட்டார் என யாருமே அவரை கட்டுகொள்ளவே இல்லை. பவுன்ஸர்கள் நிகழ்ச்சி நடக்கும் இடத்தை கையை காட்டி போங்க என கூறியுள்ளனர்
இப்படியா அவமானப்படுத்துவது
ஆனால், அதன் பின் லோகேஷ் கனகராஜ் வர ஒட்டுமொத்த பவுன்ஸர்களும், பத்திரிக்கையாளர்களும் அவரை எறும்பு போல மொய்த்துக்கொண்டனர். இதைப்பார்த்த நெட்டிசன்கள் பலர் நெல்சன் ஒரு தோல்விப்படத்தை கொடுத்துவிட்டார் என்பதற்காக இப்படியா அவமானப்படுத்துவது என்றும், ஜெயிலர் படம் வெளியாகட்டும் அப்புறம் இருக்கும் என்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.