புதுடெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 2994 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று மட்டும் 9 பேர் பலியானார்கள். நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று முன்தினம் 3095 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று சற்று குறைந்து 2994 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
நேற்று மட்டும் 9 பேர் பலியானார்கள். டெல்லி, கர்நாடகா, பஞ்சாப், கேரளா மாநிலங்களில் தலா 2 பேரும், குஜராத்தில் ஒருவரும் பலியானார்கள். இதனால் ஒட்டுமொத்த கொரோனா பலி 5,30,876ஆக உயர்ந்தது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கை 16,354ஆக இருந்தது.