திருப்பூர்: திருப்பூர் கொங்கு மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (40). ஆட்டோ டிரைவர். இவரது நண்பர் சக்திவேக்கும், அந்த பகுதியை சேர்ந்த முனியசாமி (35), மாரியப்பன் (40) ஆகியோருக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னை இருந்து வந்தது. கடந்த 29ம் தேதி சக்திவேல், மணிகண்டனிடம் சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். அவர், கொங்கு மெயின்ரோடுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இதில், தகராறு முற்றவே ஆத்திரமடைந்த மாரியப்பன், முனியசாமி ஆகிய இருவரும் சேர்ந்து, மணிகண்டனை தாக்கி கத்தியால் குத்தியுள்ளனர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று மணிகண்டன் இறந்தார். இதையடுத்து திருப்பூர் வடக்கு போலீசார் கொலை வழக்கு பதிந்து மாரியப்பன் மற்றும் முனியசாமியை கைது செய்தனர்.