சென்னை : நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் பொன்னியின் செல்வன் 2.
இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது படத்தின் இரண்டாவது பாகம் வரும் ஏப்ரல் 28ம் தேதி ரிலீசாகவுள்ளது.
இதையொட்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீடு சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
பொன்னியின் செல்வன் 2 ரிலீஸ்
நடிகர்கள் கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், சரத்குமார் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் பொன்னியின் செல்வன் 2. இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் பான் இந்தியா படமாக வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் குவித்த நிலையில், அதே சூட்டுடன் இரண்டாவது பாகத்தையும் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு தற்போது படம் இந்த மாத இறுதியில் வெளியாகவுள்ளது.
சிறப்பான பிரமோஷன்கள்
படத்தின் பிரமோஷன்களை ஒரு மாதத்திற்கு முன்னதாகவே படக்குழு துவங்கியது. படத்தின் ஒவ்வொரு சிறப்பம்சமும் வீடியோக்களாக வெளியிடப்பட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறது. ஒவ்வொரு நடிகரும் படத்தின் கேரக்டராக எப்படி மாறினார்கள், அதற்கு அவர்களுக்கு பின்னாலிருந்து உழைத்தவர்களின் பங்களிப்பு, திட்டமிடல் உள்ளிட்டவை குறித்து வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை வியப்பிற்குள்ளாக்கின. இதுபோல த்ரிஷா, கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம் உள்ளிட்டவர்களின் வீடியோக்கள் வெளியாகின.
முதல் சிங்கிள்
இதேபோல படத்தின் அகநக பாடல் முதல் சிங்கிளாக வெளியாகி வரவேற்பை பெற்றது. இதனிடையே கடந்த 29ம் தேதி படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீடு பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. இதில் கமல் மற்றும் சிம்பு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர். அவர்களுடன் படத்தின் மற்ற நடிகர், நடிகைகளும் பங்கேற்றனர். இந்த நிகழ்வின் ஹைலைட்டாக, பிரம்மாண்டமான சிம்மாசனத்தில் நடிகர்கள் அமர்ந்து தங்களது கெத்தை காட்டினர்.
நம்பர் ஒன் இடத்தில் ட்ரெயிலர்
இதன்போது படத்தின் ட்ரெயிலர் வெளியாகி தற்போது யூடியூபில் நம்பர் ஒன் இடத்தில் ட்ரெண்டாகி வருகிறது. மேலும் தற்போது 9.4 மில்லியன் வியூஸ்களை இந்த ட்ரெயிலர் எட்டியுள்ளது. படத்தின் பிரம்மாண்டம் இந்த ட்ரெயிலரின் ஒவ்வொரு இழையிலும் தெரிகிறது. இந்த ட்ரெயிலருக்கான உழைப்பையும் முன்னதாக வீடியோவாக படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். இவ்வாறு படத்தின் ஒவ்வொரு உழைப்பும் காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது.
பிரமோஷனல் டூர்
பொன்னியின் செல்வன் படத்தின் ரிலீசுக்கு முன்னதாக படத்தின் நடிகர், நடிகைகள் இணைந்து ப்ரமோஷனல் டூரில் ஈடுபட்டனர். சென்னையில் துவங்கிய அவர்களது பயணம், தொடர்ந்து மும்பை, டெல்லி என நீண்டது. மும்பையில் நடைபெற்ற நிகழ்வில் ஏஆ ரஹ்மான் மற்றும் ஐஸ்வர்யா ராய் கலந்துக் கொண்டனர். பொன்னியின் செல்வன் 2 படம் வரும் 28ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இதையொட்டி தற்போதும் அதேபோலவோ அல்லது வேறு மாற்றுக் கோணத்திலோ படத்தின் பிரமோஷன்களில் படத்தின் நடிகர்கள் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறப்பான நடிகர் தேர்வு
மணிரத்னத்தின் கனவு ப்ராஜெக்ட்டாக உருவாகியுள்ளது பொன்னியின் செல்வன் படம். படத்தில் நடிகர், நடிகைகள் தேர்வு மிகவும் சிறப்பாக அமைந்துள்ளதாக பல்வேறு தரப்பினரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர். படத்தில் லட்டு போன்ற நடிகைகளை தேர்ந்தெடுத்து மணிரத்னம் நடிக்க வைத்துள்ளதாக இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் பாரதிராஜா தெரிவித்திருந்தார். அமரர் கல்கியின் நாவலே ரசிகர்களின் விருப்பத்திற்குரிய படைப்பாக இருந்த நிலையில், அந்த கதை மாந்தர்களை இந்தப் படம் கண்முன்னே நிறுத்தியுள்ளதாகவும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.