காஞ்சிபுரம் பழையசீவரத்தில் சிலிண்டர் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பிய பெண்களிடம், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் எளிமையாக விளக்கமளித்தார்.
பாஜக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க, நிர்மலா சீதாராமன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன் உள்ளிடோர் அங்கு சென்றனர்.
அப்போது, தன்னை கைக்குலுக்கி வரவேற்ற பெண்களிடம், அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கிறதா? என நிர்மலா சீதாராமன் கேட்ட நிலையில், அனைத்தும் கிடைப்பதாகவும், விலை உயர்வால் சிலிண்டர் வாங்க சிரமப்படுவதாகவும் அவர்கள் பதிலளித்தனர்.
அப்போது, வெளிநாடுகளில் இருந்து எரிவாயு இறக்குமதி செய்யப்படுவதால், அதற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்படுவதாகவும், நாட்டில் சிலிண்டர் எரிவாயுவை உற்பத்தி ஆலைகள் இல்லாதததால், விலையேற்றத்தை தவிர்க்க முடியவில்லை என்றும் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்தார்.