திருப்பதி : நடிகை ஸ்ரேயா தனது தாயாருன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
ரஜினி, விஜய், தனுஷ் என பலருடனும் நடித்த ஸ்ரேயா தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
பல திரைப்படங்களில் முன்னணியாக நடித்தப்பிறகும், பட வாய்ப்புகள் கிடைக்காததால் தற்போது கிடைத்த வேடத்தில் நடித்து வருகிறார்.
நடிகை ஸ்ரேயா சரண்
தென்னிந்தியாவில் ரசிகர்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்த நடிகை ஸ்ரேயா சரண் நடிப்பு மட்டுமல்லாமல் நடனம் கவர்ச்சி என அனைத்திலும் அடித்து தூள் கிளப்பி முன்னணி நடிகையாக வலம் வந்தவர். குறிப்பாக விஜய், ரஜினிகாந்த், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகைகளின் திரைப்படங்களில் நடித்து அனைவரையும் கொள்ளை கொண்ட இவருக்கு மழை திரைப்படம் மிகப்பெரிய அறிமுகத்தைக் கொடுத்தது.

டாப் நடிகையாக
ரஜினிக்கு ஜோடியாக சிவாஜி படத்திலும், தனுஷூடன் திருவிளையாடல் ஆரம்பம் படத்திலும்,விஜய்யுடன் அழகியதமிழ்மகன், குட்டி, கந்தசாமி உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வெற்றிக் கொடியை பறக்க விட்டு வந்த ஸ்ரேயா இடையில் சில படங்களில் ஒரு சில பாடலுக்கு டான்ஸ் ஆடும் நிலைக்கு சென்றார்.

கணிசமான படங்களில்
நடிகை ஸ்ரேயா தற்போது தமிழில் இவர், கமனம், சண்டக்காரி, நரகாசுரன் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். இத்திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளன. கடந்த வாரம் இவரது நடிப்பில், கப்ஜா திரைப்படம் வெளியானது. இதில் மதுமதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் இந்திய அளவில் அனைத்து ரசிகர்களாலும் அறியப்பட்ட உச்ச நடிகர்களான உபேந்திரா, சுதீப், சிவராஜ்குமார் என்று மூன்று நடிகர்கள் நடித்திருந்தனர். இப்படத்திற்கு கலவையான விமர்சனம் கிடைத்தது.

திருப்பதியில் ஸ்ரேயா
இந்நிலையில்,நடிகை ஸ்ரேயா சரண் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தனது தாயாருடன் சாமி தரிசனம் செய்தார். தரிசனத்திற்கு பிறகு தேவஸ்தானம் சார்பில் அவருக்கு, சிறப்பு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்தை விட்டு வெளியே வந்த நடிகை ஸ்ரேயாவை ரசிகர் ஒருவர் செல்பி எடுக்க முயன்றதோடு மட்டுமில்லாமல், அவரை தொட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த காவலர்கள் அவரை தடுத்து நிறுத்தி அனுப்பி வைத்தனர்.