சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தயாரிப்பாளராகவும் பட்டையை கிளப்பி வருகிறார்.
நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என அடுத்தடுத்த பரிணாமங்களை சிவகார்த்திகேயனை பார்க்கும் ரசிகர்கள் மிகவும் உற்சாகமடைந்து வருகின்றார்.
தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் மாவீரன், அயலான் என அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.
நடிகர் சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் 3 படத்தில் காமெடியனாக தன்னுடைய பயணத்தை சினிமாவில் துவக்கினாலும் மெரினா படம் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது. தொடர்ந்து அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்த காமெடி தளத்தில் பயணம் செய்த சிவகார்த்திகேயன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட படங்களின்மூலம் ரசிகர்களின் இதயத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துக் கொண்டார். சிவகார்த்திகேயனின் பக்கத்து வீட்டு பையன் லுக்கும் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது.

பன்முகத் திறமை
தொடர்ந்து கீர்த்தி சுரேஷ், ஹன்சிகா, நயன்தாரா என முன்னணி நடிகைகளுடன் ஜோடி சேர்ந்து நடித்த சிவகார்த்திகேயனின் அந்தஸ்தும் திரைத்துறையில் சிறப்பாக உயர்ந்தது. இதையடுத்து தயாரிப்பாளராகவும் பாடகராகவும் பாடலாசிரியராகவும் தன்னுடைய அடுத்தடுத்த திறமைகளை வெளிப்படுத்தி அவற்றில் எல்லாம் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். தனக்கு மட்டுமில்லாமல் விஜய் போன்ற மற்ற நடிகர்களுக்கும் பாடல்களை எழுதி வருகிறார் சிவகார்த்திகேயன்.

மாவீரன் படத்தின் சூட்டிங் நிறைவு
தயாரிப்பாளராகவும் நடிகராகவும் அவருக்கு அடுத்தடுத்து சிறப்பாக கைக்கொடுத்தது டாக்டர் மற்றும் டான் படங்கள். இந்தப் படங்கள் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்தன. தொடர்ந்து மிகுந்த எதிர்பார்ப்புடன் ஹாட்ரிக் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட பிரின்ஸ் படம் சிவாவிற்கு சொதப்பலாகவே அமைந்தது. இதையடுத்து தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதன் சூட்டிங் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்துள்ளது. தொடர்ந்து படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்
இந்நிலையில் ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிப்பில் தன்னுடைய SK21 படத்தின் சூட்டிங்கில் விரைவில் இணையவுள்ளார் சிவகார்த்திகேயன். ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ள இந்தப் படம் குறித்த அறிவிப்பு பல மாதங்களுக்கு முன்னதாகவே அறிவிக்கப்பட்டது. படத்தில் சிவகார்த்திகேயனுடன் சாய் பல்லவி ஜோடியாக நடிக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மாவீரன் படத்தின் சூட்டிங்கை முடித்துள்ள சிவகார்த்திகேயன், கமல் தயாரிப்பில் விரைவில் இணையவுள்ளார்.

ஸ்பெஷலான படம்
இந்நிலையில் SK21 தனக்கு மிக மிக ஸ்பெஷலான படமாக அமையும் என்று சிவகார்த்திகேயன் உற்சாகம் தெரிவித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் தனக்கு ஜோடியாக இணைந்துள்ள சாய் பல்லவி, மிகச்சிறந்த நடிகை என்றும் அவருடன் இணைந்து நடிக்க தான் மிகுந்த ஆர்வமுடன் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். விஜய்யை தொடர்ந்து கோலிவுட்டில் சிறந்த டான்சராக அறியப்படும் சிவகார்த்திகேயனுக்கு இந்தப் படத்தில் டான்சே இல்லை என்று கூறப்படுகிறது.

வித்தியாசமான கேரக்டரில் சிவகார்த்திகேயன்
படத்தில் மிகவும் வித்தியாசமான கேரக்டரில் சிவகார்த்திகேயன் இந்தப் படத்தில் நடிக்கவுள்ளதாகவும் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு படம் எடுக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தின் சூட்டிங் காஷ்மீரில் நடத்தப்பட உள்ள நிலையில், தற்போது படத்தின் இயக்குநர் மற்றும் குழுவினர் காஷ்மீரில் லோகேஷன் தேர்வில் ஈடுபட்டுள்ளனர். தற்போது மாவீரன் படத்தின் சூட்டிங்கை சிவகார்த்திகேயன் நிறைவு செய்துள்ள நிலையில் விரைவில் SK21 படத்தின் சூட்டிங் துவங்கப்பட உள்ளது.