ரஷ்ய ஜனாதிபதி புடினின் ஆதரவாளரான சமூக ஊடக பிரபலம் ஒருவர் வெடிகுண்டு தாக்குதலில் உடல் சிதறி பலியாகியுள்ளார்.
பரிசுப்பொருளில் வெடிகுண்டு
குறித்த நபருக்கு அடையாளம் தெரியாத பெண் ஒருவர் அளித்த பரிசுப்பொருளில் வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டிருந்தாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய இராணுவம் தொடர்பில் சமூக ஊடகங்களில் காணொளிகளை பகிர்ந்து வருபவர் 40 வயதான Vladlen Tatarsky.
இவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ள நிலையில், வெடிகுண்டு வெடித்து உடல் சிதறி பலியாகியுள்ளார்.
இவருடன் அந்த சம்பவத்தில் 25 பேர்கள் வரையில் காயங்களுடன் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
Vladlen Tatarsky கொல்லப்பட்ட தகவலை ரஷ்ய உள்விவகார அமைச்சகம் உறுதி செய்துள்ளதுடன், காயமடைந்த 25 பேர்களில் 19 பேர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
@AP
Vladlen Tatarsky என்பவருக்கு அளித்த பரிசுப்பொருளில் சுமார் 200 கிராம் அளவுக்கு வெடிமருந்துடன் கருவி ஒன்று பொருத்தப்பட்டிருந்ததாகவும், அது வெடித்ததில் அவர் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தேநீர் விடுதி ஒன்றில் சுமார் 100 பேர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றை Vladlen Tatarsky முன்னெடுத்து வந்தார்.
மேலும், வாக்னர் கூலிப்படை நிறுவனரான Yevgeny Prigozhin என்பவருக்கு சொந்தமான தேநீர் விடுதி அது எனவும், குறித்த நிகழ்ச்சிக்கு அவரும் கலந்துகொள்ள இருந்ததாக கூறப்படுகிறது.
@reuters
அடையாளம் தெரியாத பெண்
அடையாளம் தெரியாத பெண் ஒருவர், அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளதாகவும், அவரே தொடர்புடைய பரிசுப்பொருளை Vladlen Tatarsky என்பவருக்கு அளித்ததாகவும் கூறுகின்றனர்.
பரிசுப்பொருளை அவர் கைப்பற்றிய சில நிமிடங்களில் அந்த பரிப்பொருள் வெடித்துச் சிதறியதாக சம்பவயிடத்தில் காணப்பட்ட சிலர் தெரிவிக்கின்றனர்.
தற்போது தொடர்புடைய பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டு பொலிசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
Credit: East2West
சம்பவம் நடந்த பகுதியில் டசின் கணக்கான ராணுவத்தினரும் பொலிசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை எவரும் பொறுப்பேற்கவில்லை என்றே கூறப்படுகிறது.
ஆனால் ரஷ்ய ஊடகங்கள் இது உக்ரைன் உளவுத்துறையின் சதி என தகவல் வெளியிட்டு வருகின்றனர்.