சென்னை: நடிகர் சூர்யாவின் 42 வது படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார்.
சூர்யா 42 என்ற டைட்டிலில் உருவாகி வரும் இந்தப் படம் 10 மொழிகளில் 3 டி டெக்னாலஜியில் உருவாகி வருகிறது.
ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தப் படத்தின் டீசர், டைட்டில் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சூர்யா 42 படத்தின் ஓடிடி ரைட்ஸ் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
சூர்யா 42 அப்டேட்
ஸ்டுடியோ க்ரீன் தயாரித்து வரும் சூர்யா 42 திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. சூர்யாவின் 42வது படமான இதனை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். 10 மொழிகள், 3டி டெக்னாலஜி என அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படம், சூர்யாவின் கேரியரில் தரமான சம்பவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யாவுடன் திஷா பதானி, யோகி பாபு உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர்.

ஓடிடி ரைட்ஸ்
சூர்யா 42 டீசர் ஏப்ரலில் வெளியாகும் என சில தினங்களுக்கு முன்னர் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறியிருந்தார். அதேபோல், மே மாதம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனவும் அவர் அப்டேட் கொடுத்திருந்தார். இந்நிலையில், சூர்யா 42 படத்தின் ஓடிடி உரிமை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்தப் படத்தின் ஓடிடி ரைட்ஸை அமேசான் ப்ரைம் கைப்பற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது.

பல கோடிகளில் பிசினஸ்
சூர்யா 42 தொடங்கப்பட்டது முதலே இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் பிசினஸ் குறித்த செய்திகள் வெளியாகி வருகின்றன. முக்கியமாக விஜய்யின் லியோ படத்தின் பிசினஸை விடவும் சூர்யா 42 படத்தின் வியாபாரம் மாஸ் காட்டி வருவதாக சொல்லப்பட்டது. இந்நிலையில், தற்போது ஓடிடி உரிமையும் பல கோடிகளுக்கு விற்பனையாகியுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது தமிழில் அதிக விலைக்கு விற்பனையான இரண்டாவது படம் சூர்யா 42 தான் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அபிஸியல் அப்டேட்ஸ்
சூர்யா 42 டீசர், ரிலீஸ் தேதி, ஓடிடி ரைட்ஸ் குறித்து விரைவில் அடுத்தடுத்து அபிஸியல் அப்டேட்ஸ் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இதனால், சூர்யா ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர். அதேநேரம் இந்தப் படம் மார்வல் சீரிஸ்களில் ஒன்றான Shang-Chi and the Legend of the Ten Rings படத்தின் காப்பி எனவும் சொல்லப்படுகிறது. மேலும் 6 விதமான தோற்றங்களில் சூர்யா நடித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் வாடிவாசல்
தொடர்ந்து சூர்யா 42 பற்றிய அப்டேட்கள் வெளியாகி வருவதால், இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா. வெற்றிமாறனின் விடுதலை முதல் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனையடுத்து இரண்டாம் பாகமும் உடனடியாக வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இதனால், சூர்யாவின் வாடிவாசல் இந்தாண்டு இறுதிக்குள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.