நூலகத்திற்கு படிக்க வரும் மாணவியரிடம் நானும் ரவுடி தான் என வசனம் பேசிய நபர் கைது…!

சேலத்தில் அரசு கலைக்கல்லூரி மாணவிகளை மது போதையில் கிண்டல், கேலி செய்த நபர், தட்டிக்கேட்ட சக மாணவர்களிடம் தன்னை பெரிய ரௌடி எனக் கூறி பில்டப் செய்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சில நாட்களுக்கு முன் சேலம் மாவட்ட மைய நூலத்துக்கு வந்த மாணவிகளை தனது செல்போனில் படம் பிடித்த அந்த நபர், கேலி செய்யும் தொணியில் பேசினார் என்று கூறப்படுகிறது.

அதனைப் பார்த்த சக மாணவர்கள் அந்த நபரை தட்டிக்கேட்கவே, தன் பெயர் கிச்சிப்பாளையம் சரத்குமார் என்றும் தன்னைத் தெரியாத ஆட்களே இல்லை என்றும் கூறி பில்டப் செய்துள்ளார்.

பல காவல் நிலையங்களில் தன் மீது வழக்குகள் இருப்பதாகவும் அவர் கூறிய நிலையில், போதையில் உளறுகிறார் எனக் கருதி மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால், மாநகரக் காவல்துறையினர் தாமாக முன்வந்து சரத்குமாரின் வீடு தேடிச் சென்று கைது செய்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.