மகாவீர் ஜெயந்தி நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், உரிமம் கொண்ட கிளப்பு களைச் சார்ந்த பார்கள், ஓட்டல்களைச் சார்ந்த பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூட வேண்டும். தவறினால் மதுபான விற்பனை விதிமுறைகளின்படி, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இறைச்சி கடைகள் செயல்படவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி கோவை மாநகராட்சியில் நாளை (04.04.2023) இறைச்சி கடைகள் இயங்க தடை விதிக்கப்படுவதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. விதிகளை மீறி கடைகள் செயல்பட்டால் அந்தக்கடைகள் மற்றும் உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்திருக்கிறது.