சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர் மாவட்டம், சக்கரப்பள்ளி, அய்யம்பேட்டையில் அமைந்துள்ளது. இந்திரன் குமாரனான ஜயந்தனும் தேவர்களும் பூசித்த தலம். திருமால் இத்தல இறைவனை வழிபட்டு சக்கரா யுதம் பெற்றதனால் இத்தல இறைவனுக்கு “சக்கரவாகேஸ்வரர்” என்றும், ஊர் “சக்கரப்பள்ளி” என்றும் பெயர். சப்த தலங்களில் இத்தலமும் ஒன்றாகும். பிராமி, மகேசுவவரி, கௌமாரி, வைணவி, வராகி, மாகேந்திரி, சாமுண்டி முதலிய சப்தமாதர்கள் வழிபட்ட தலம். மக்கள் வழக்கில் இவ்வூர் “ஐயம்பேட்டை” என்று வழங்குகிறது. இப்பெயரில் பல ஊர்கள் இருப்பதால் வழக்கில் இவ்வூரைத் […]
