பர்லியாறு பள்ளிவாசலுக்குள் புகுந்த காட்டு யானை கூட்டங்கள்: பொருட்களை எடுத்து சாப்பிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல்

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இயற்கை வளம் மிக்க மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் காட்டு யானைகள், மான், புலி,சிறுத்தை, கரடி,காட்டெருமை என ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. மேட்டுப்பாளையம் வனப்பகுதி யானைகளின் வலசைப் பாதை என்பதால் காட்டு யானைகளின் எண்ணிக்கை அதிகம். கடந்த இரு மாத காலத்திற்கும் மேலாக வனப்பகுதியில் மழை இல்லாத காரணத்தினாலும்,தற்போது கோடை காலம் துவக்கம் என்பதாலும், வனப்பகுதிக்குள் போதுமான தண்ணீர் கிடைக்காததனால் வனவிலங்குகள் காட்டை விட்டு வெளியே வந்து உணவுகளை தேடி வருகிறது.

இந்த நிலையில் மேட்டுப்பாளையம் அடுத்த பர்லியாறு பகுதியில் உள்ள பள்ளிவாசலுக்குள் இரவு நேரத்தில் நுழைந்த காட்டு யானை கூட்டம் அங்குள்ள பொருட்களை சேதம் செய்து அரிசிகளை எடுத்து சாப்பிட்ட வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. நள்ளிரவு நேரத்தில் நுழைந்த காட்டு யானைக் கூட்டத்தால் பள்ளிவாசலில் இருந்தவர் நபர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.