
வாராந்திர சிறப்பு ரயில், ரயில் எண்- 01465, மும்பையின் முக்கிய ரயில் நிலையமான லோக் மானிய திலக் டர்மினஸ்-யில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்படும். அடுத்த நாள் இரவு 11.20 மணிக்கு கன்னியாகுமரி வந்தடையும். ஏப்ரல் 6, 13, 20, 27 மற்றும் மே 4, 11, 18, 25 மற்றும் ஜூ 1 தேதி மும்பையிலிருந்து இயக்கப்படுகிறது. எல்லா வியாக்கிழமைகளிலும் இயக்கப்படுகிறது.
இதுபோல ரயில் எண் – 01466, கன்னியாகுமரியில் இருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் இரவு 9.30 மணிக்கு மும்பை செல்லும். ஏப்ரல் 8, 15, 22, 29, மே 6, 13,20, 27 மற்றும் ஜூன் 3 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது. இது எல்லா சனிக்கிழமைகளிலும் இயக்கப்படுகிறது.
இந்த ஸ்பெஷன் ரயில் கோழிக்கோடு, எர்னாகுலம், திருவனந்தபுரம், நாகர்கோவில், கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களின் வழியாக பயணிக்கிறது.
இந்த ரயிலில் ஒரு 2 டயர் ஏசி பெட்டி, மூன்று ஏசி 3 டயர் பெட்டிகள், 8 சிலீப்பர் பெட்டிகள், 3 பொதுப் பெட்டிகள், 2 செக்கண்ட் கிளாஸ் பெட்டிகள் ( மாற்றுத் திறனாளிகளுக்கு ) இருக்கிறது.