கோழிக்கோடு அருகே ரயிலில் சென்ற பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு.. 3 சடலங்கள் கண்டெடுப்பு

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே ரயிலில் சென்ற பயணிகள் மீது மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் 9 பேர் படுகாயமடைந்தனர்.

ஆலப்புழாவிலிருந்து கண்ணூர் நோக்கி சென்ற விரைவு ரயில் எலத்தூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது டி1 கோச்சில் மர்ம நபர் ஒருவர் 2 பாட்டில்களில் வைத்திருந்த பெட்ரோலை பயணிகளின் மீது ஊற்றி தீ வைத்துள்ளார்.

இதில் பெண்கள் உள்பட 9 பேர் தீக்காயம் அடைந்த நிலையில், கோழிக்கோடு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே அப்பகுதியில் உள்ள தண்டவாளத்தில் நள்ளிரவில் ஒரு ஆண், பெண் மற்றும் குழந்தை என 3 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

ரயிலில் இருந்து தப்பிக்க முயன்றபோது அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் சாலையில் நடந்துசென்று இருசக்கர வாகனத்தில் செல்லும் CCTVயில் பதிவான காட்சிகளை கைப்பற்றிய போலீசார் அவரை தேடி வருகின்றனர்.  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.