மோடி குடும்ப பெயர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் ஜாமீன் வழங்கியதோடு மேல்முறையீடு செய்ய 30 நாள் அவகாசமும் அளித்தது. இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை காரணம்காட்டி ராகுல் காந்தியை எம்.பி. பதவியில் இருந்து மக்களவை செயலகம் தகுதிநீக்கம் செய்தது. ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் […]
