விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. இந்தப் படத்தில் விஜய்யுடன் இணைந்து த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன், மிஸ்கின் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். நடிகர் கமல்ஹாசன் இந்தப் படத்தில் கேமியோ ரோல் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.
எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
Vijay: ப்பா.. என்னா ஸ்பீடு.. உலகளவில் சாதனை செய்த விஜய்.. வேற லெவல் போங்க.. கொண்டாடித் தீர்க்கும் ரசிகாஸ்!
தொடர்ந்து லியோ படத்தின் அப்டேட்டுகள் திடீர் திடீரென வெளியாகி ரசிகர்களை திக்குமுக்காடச் செய்கிறது. லியோ ஷூட்டிங் ஸ்பாட் வீடியோக்கள், போட்டோக்கள் தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் வெளியான வண்ணம் உள்ளன. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இயக்குநர் லோகேஷ் கனகராஜ், லியோ திரைப்படம் ஆக்ஷன் படம் என்று ஒரு அப்டேட்டை கொடுத்தார்.
மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு 60 நாட்களில் முடிந்து விடும் என்றும் கூறியிருந்தார். இதனால் லியோ திரைப்படத்தில் சண்டைக்காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது என தெரிகிறது. இதனை தொடர்ந்து லியோ படத்தில் ஃபகத் ஃபாஸில் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. விக்ரம் படத்தில் நடித்த அமர் என்ற அதே கேரக்டரில்தான் நடிகர் ஃபகத் ஃபாஸில் நடிப்பார் என்றும் தகவல் வெளியானது.
Nayanthara: மகன்களுடன் வெளிநாட்டில் நயன்தாரா விக்னேஷ் சிவன்.. புதிய புகைப்படங்கள்!
மேலும் நடிகை காயத்ரியும் லியோ படத்தில் நடிக்கிறார் என்றும் தகவல் பரவியது. இந்நிலையில் லியோ படத்தில் நடிகை ஆண்ட்ரியாவும் இணைந்துள்ளதாக தகவல் பரவி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார் நடிகை ஆண்ட்ரியா. இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியாவும் லோகேஷ் கனகராஜும் அப்போது இணைந்து எடுத்த போட்டோவை தற்போது வெளியிட்டு இருவரும் லியோ படத்தில் இணைந்து பணியாற்றுவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
நயன்தாராவின் உயிரும் உலகமும்!
இதனை பார்த்த நெட்டிசன்கள் உண்மையிலேயே ஆண்ட்ரியா லியோ படத்தில் நடித்தால், அவரது ஆன்போர்டு அறிவிப்பு இப்படியா இருக்கும் என கேட்டு வருகின்றனர். மேலும் இதனிடையே லியோ படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஹைத்ராபாத்தில் தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. லியோ படம் குறித்து வெளியாகி வரும் அப்டேட்டுகளால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
லியோ திரைப்படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்து வருகிறார். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். வரும் அக்டோபர் 19 ஆம் தேதி லியோ திரைப்படம் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Nayanthara: குழந்தைகளின் பெயரில் உள்ள N-க்கு அர்த்தம் இதுதான்… விக்னேஷ் சிவன் விளக்கம்!