Shriya's picture :பிடித்த புகைப்படம்.. க்யூட் புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரேயா!

ஐதராபாத் : நடிகை ஸ்ரேயா சரண், ரஜினி, விஜய் என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

திருமணம் ஆகி குழந்தை பிறந்தநிலையிலும் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார் ஸ்ரேயா.

ஸ்ரேயா நடிப்பில் வெளியான ஆர்ஆர்ஆர் படம் ஆஸ்கர் விருதை வென்றுள்ளதையடுத்து மிகவும் உற்சாகமடைந்துள்ளார்.

நடிகை ஸ்ரேயா சரண்

தரண், ஜெயம் ரவி உள்ளிட்டவர்களுடன் துவக்கத்தில் படங்களில் நடித்துவந்த ஸ்ரேயாவின் க்யூட் பர்மார்மென்ஸ் தொடர் ஹிட்களை அவருக்கு கொடுத்தது. இதையடுத்து தமிழில் ஜெயம் ரவி, தனுஷ், ரஜினி என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். தென்னிந்திய மொழிகளில் மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் இவரது படங்கள் அடுத்தடுத்து ரிலீசாகி சிறப்பாக கைக்கொடுத்தது.

அடுத்தடுத்த படங்கள்

அடுத்தடுத்த படங்கள்

தென்னிந்திய மொழிகளில் சிறப்பான நடிகையாக வலம்வந்த ஸ்ரேயா, ஒருகட்டத்தில் திருமணம் செய்துக் கொண்டார். அவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. ஆனாலும் தன்னுடைய கேரியரில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். தமிழில் சண்டக்காரி, கமனம், நரகாசுரன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்தப் படங்கள் அடுத்தடுத்து ரிலீசாகவுள்ள நிலையில், தெலுங்கில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார்.

சிறப்பாக கைக்கொடுத்த ஆர்ஆர்ஆர் படம்

சிறப்பாக கைக்கொடுத்த ஆர்ஆர்ஆர் படம்

இவரது நடிப்பில் வெளியான ஆர்ஆர்ஆர் படம் சர்வதேச அளவில் சிறப்பான வரவேற்பை பெற்ற நிலையில், சமீபத்தில் அந்தப் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. இதையடுத்து மேலும் உற்சாகமடைந்துள்ளார் ஸ்ரேயா. இந்தப் படத்தில் சிறிய கேரக்டரில்தான் ஸ்ரேயா நடித்திருந்தார். என்றபோதிலும் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ள படத்தில் தான் இடம்பெற்றுள்ளது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்த உற்சாகத்துடன் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார்.

ஸ்ரேயா நடிப்பில் கப்ஜா படம்

ஸ்ரேயா நடிப்பில் கப்ஜா படம்

சமீபத்தில் ஸ்ரேயா நடிப்பில் வெளியான கப்ஜா படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் ஸ்ரேயாவிற்கு நல்ல விமர்சனங்களை பெற்றுத் தந்துள்ளது. உபேந்திரா, சுதீப் மற்றும் சிவராஜ்குமார் உள்ளிட்டவர்களுடன் இந்தப் படத்தில் நடித்திருந்தார் ஸ்ரேயா. சமூக வலைதளங்களில் அதிகமான கவர்ச்சிப் படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கி வருகிறார் ஸ்ரேயா. இதனால் இவரை அதிகமான பாலோயர்கள் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பக்கங்களில் பின்தொடர்ந்து வருகின்றனர்.

பிடித்த புகைப்படம்

பிடித்த புகைப்படம்

இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் ஸ்ரேயா. இதனிடையே தற்போது ஒரு புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்தப் புகைப்படம் தன்னுடைய மனதிற்கு மிகவும் நெருக்கமான மற்றும் தனக்கு பிடித்த புகைப்படம் என்றும் அவர் கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார். டாப்லெஸ்ஸாக அந்த புகைப்படம் காணப்படுகிறது. எந்தவிதமான அணிகலன்களும் இல்லாமல் இருந்தாலும் தனித்துவ அழகுடன் அந்தப் படத்தில் ஸ்ரேயா காணப்படுகிறார். அந்தப் புகைப்படம் அவருக்கு பிடித்திருப்பதற்கு காரணம் இல்லாமல் இல்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.