சென்னை: ஒட்டுமொத்த இந்தியாவை இணையத்தால் இணைத்துள்ளோம், சமூக நீதி நம்மை இணைத்துள்ளது என சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாட்டில் காணொளி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மாநாட்டில் 20க்கும் மேற்பட்ட அரசியல் கட்சித்தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.