SS Rajamouli On Dasara – ராவான கதாபாத்திரங்கள்.. பின்னணி இசை சிறப்பு – பாராட்டி தள்ளிய ராஜமௌலி

ஹைதராபாத்:SS Rajamouli On Dasara (தசராவை பாராட்டிய ராஜமௌலி) இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனை இயக்குநர் ராஜமௌலி பாராட்டி ட்வீட் செய்திருக்கிறார்.

தமிழில் நான் ஈ படத்தின் மூலம் பிரபலமானவர் நானி. இவர் தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் தற்போது கீர்த்தி சுரேஷுடன் தசரா என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

கவனம் ஈர்த்த நான் ஈ

இந்தியாவின் பிரமாண்ட இயக்குநர் என்ற பெயர் எடுத்தவர்தான் ராஜமௌலி. இவர் ஈயை மைய கதாபாத்திரமாக வைத்து நான் ஈ என்ற படத்தை இயக்கினார். இதில் நானி, சமந்தா, சுதீப் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான அப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. மேலும், ஈயை வைத்து இவ்வளவு பிரமாண்டமாக ஒரு படம் எடுக்க முடியுமா எனவும் திரையுலக பிரபலங்களில் இருந்து ரசிகர்கள் வரை கேள்வி எழுப்பினர். அந்தப் படம் நானிக்கு மிகப்பெரிய அடையாளமாக இருந்தது.

தமிழில் வெல்ல போராடும் நானி

தமிழில் வெல்ல போராடும் நானி

தெலுங்கில் நானி முன்னணி கதாநாயகனாக வலம் வருகிறார். அதேசமயம் தமிழில் எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்பதுதான் அவரது குறிக்கோளாக இருக்கிறது. இதனை பல மேடைகளில் அவர் ஓப்பனாகவே கூறியிருக்கிறார். இருந்தாலும் அவருக்கு தமிழில் பெரிய திருப்புமுனை ஏற்படவில்லை. அவர் சாய் பல்லவியுடன் நடித்த ஷ்யாம் சிங்கா ராய் படம் தமிழ்நாட்டில் பரவலான வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

கீர்த்தி சுரேஷுடன் தசரா

கீர்த்தி சுரேஷுடன் தசரா

நான் தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள தசரா படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். தெலுங்கிலிருந்து எப்படி புஷ்பா படமும், கன்னடத்திலிருந்து எப்படி கேஜிஎஃப் படமும் வெற்றியடைந்ததோ அதேபோல் இந்தப் படமும் வெற்றியடையும் என நானி தசரா ப்ரோமோஷனில் கூறியிருந்தார்.

சந்தோஷ் நாராயணன் இசைக்கும்

சந்தோஷ் நாராயணன் இசைக்கும்

இந்நிலையில் இந்தப் படமானது கடந்த 30ஆம் தேதி வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கியிருக்கும் இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். அவரது இசையில் மைனர் வேட்டிக்கட்டி உள்ளிட்ட பாடல்களுக்கு ரசிகர்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கின்றன. பாடல்களைப் போல் அவரது பின்னணி இசைக்கும் பாராட்டு குவிந்துள்ளன.

சந்தோஷ் நாராயணனை பாராட்டிய ராஜமௌலி

சந்தோஷ் நாராயணனை பாராட்டிய ராஜமௌலி

இந்தப் படத்தையும், சந்தோஷ் நாராயணனையும் பாராட்டி ராஜமௌலி ட்வீட் செய்திருக்கிறார். அவர் பதிவு செய்திருக்கும் ட்வீட்டில், “ராவான கதாப்பாத்திரங்கள், இயல்பான நிலப்பரப்பு ஆகியவற்றுடன் மனதைத் தொடும் காதல் காட்சிகளால் மனதை ஈர்க்கிறார் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா . இதுவரையில்லாத அளவுக்கு சிறப்பாக நடித்திருக்கிறார் நானி. கீர்த்தி தனது கதாப்பாத்திரத்தை வெகு இயல்பாக கையாண்டிருக்கிறார். அனைத்து நடிகர்களும் கவனம் ஈர்த்தனர். ஒளிப்பதிவு முதல் தரம். பின்னணி இசை சிறப்பு. தசரா குழுவுக்கு வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.