புதுடில்லி, லோக்சபாவில் கேள்வி ஒன்றுக்கு, மத்திய கல்வி அமைச்சகம் எழுத்துபூர்வமாக அளித்துள்ள பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்தாண்டு நடந்த ஜே.இ.இ., எனப்படும் பொறியியல் கல்லுாரிகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வின் முக்கிய தேர்வில் பங்கேற்பதில் சில மாணவர்களுக்கு பிரச்னைகள் இருந்ததாக கூறப்பட்டது. விசாரணைக்குப் பின் அந்த மாணவர்களுக்கு மறுதேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்பட்டது.
கடந்த ௨௦௨௧, ௨௦௨௨ல் படித்த மற்றும் தற்போது பள்ளி இறுதித் தேர்வை எழுதும் மாணவர்கள், இந்தாண்டு ஜே.இ.இ., நுழைவுத் தேர்வை எழுத முடியும். அதனால், ஒருமுறை வாய்ப்பாக எந்தச் சலுகையும் வழங்கப்படாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement