சென்னை: சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன் படத்தில் “உன் மேல ஒரு கண்ணு” என பாடி நடித்து பிரபலமான கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு என தென்னிந்தியாவின் டாப் ஹீரோயினாகவே மாறி விட்டார்.
ரஜினிமுருகன், ரெமோ மற்றும் சீமராஜா என தொடர்ந்து சிவகார்த்திகேயன் உடன் ஜோடி போட்டு நடித்த கீர்த்தி சுரேஷ், விஜய், விக்ரம் என டாப் ஹீரோக்களுக்கு ஜோடியானார்.
இந்நிலையில், நீண்ட நாட்கள் கழித்து சிவகார்த்திகேயன் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஒரே இடத்துக்கு சென்றிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
உன் மேல ஒரு கண்ணு
எந்த மியூசிக் சேனலை திறந்தாலும் கீர்த்தி சுரேஷ் “உன் மேல ஒரு கண்ணு.. நான் தான் உன் முறைப்பொண்ணு” என சிவகார்த்திகேயனை சைட் அடித்துக் கொண்டே பாடிய பாடல் ரஜினிமுருகன் படம் ரிலீஸ் ஆன சமயத்தில் டிரெண்டானது. அதன் பிறகு கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து சிவகார்த்திகேயன் உடன் ஜோடி போட்டு ரெமோ படத்தில் செம பப்ளியாக நடித்திருந்தார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடித்த சீமராஜா படத்திலும் கீர்த்தி சுரேஷ் பிளாஷ்பேக் போர்ஷனில் ராஜா சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருப்பார்.

தேசிய விருது
கவர்ச்சி நடிகையாக நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் திடீரென தெலுங்கு இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகை சாவித்ரியின் பயோபிக்கில் சாவித்ரியாகவே வாழ்ந்து தேசிய விருதையே தட்டிச் சென்று தனது கரியரையே உச்சத்துக்கு கொண்டு சென்றார். விஜய் உடன் சர்கார் மற்றும் பைரவா படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ், விக்ரம் உடன் சாமி ஸ்கொயர் படத்திலும் நடித்திருந்தார். சோலோ ஹீரோயினாகவும் பல படங்களில் நடித்து பட்டையை கிளப்பி வருகிறார்.

சிவகார்த்திகேயன் உடன்
சிவகார்த்திகேயனுக்கு சரியான ஜோடியாக இருந்த கீர்த்தி சுரேஷ் இனிமேல் அவருடன் இணைந்து நடிக்க மாட்டாரா? என்றே ரசிகர்கள் கேள்வி எழுப்ப ஆரம்பித்து விட்டனர். கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சமந்தா என டாப் நடிகைகளுடன் நடித்து வந்த சிவகார்த்திகேயன் சமீப காலமாக பிரியங்கா மோகன், அதிதி ஷங்கர் என இளம் நடிகைகளுடன் நடித்து வருகிறார்.

சேப்பாக்கத்தில் சிவகார்த்திகேயன்
தல தோனியின் தீவிர ரசிகரான நடிகர் சிவகார்த்திகேயன் தனது நண்பரும் காமெடி நடிகருமான சதீஷ் உடன் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த சிஎஸ்கே போட்டியை கண்டு ரசித்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை தோனி தலைமையிலான அணி ஹோம் கிரவுண்டில் பின்னி பெடலெடுத்து வெற்றியை ருசித்தது.

ஒரே இடத்தில்
கிரிக்கெட், கால்பந்து என ஸ்போர்ட்ஸ்களில் அதிக ஆர்வம் செலுத்தி வரும் நடிகை கீர்த்தி சுரேஷும் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியை சேப்பாக்கம் மைதானத்தில் கண்டு ரசித்த புகைப்படங்கள் தீயாக பரவி வருகின்றன. நீண்ட நாட்கள் கழித்து சிவகார்த்திகேயனும், கீர்த்தி சுரேஷும் ஒரே இடத்தில் வந்த நிலையில், இருவரும் சந்தித்து கொண்டார்களா? இல்லையா? என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

ஹரிஷ் கல்யாண், இவானா
தோனி தயாரிப்பில் உருவாகி வரும் LGM படத்தில் நடித்து வரும் ஹரிஷ் கல்யாண், இவானா மற்றும் நடிகை நதியா உள்ளிட்டவர்களும் நேற்று சென்னையில் நடந்த போட்டியை நேரில் கண்டு ரசித்த புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் பரவி வருகின்றன. என்ன கோடம்பாக்கமே சேப்பாக்கத்தில் இருக்கே என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.