ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர், அரசாங்கத்துடன்
இணையப்போவதாக இன்று நாடாளுமன்றில் தெரிவித்த, நாடாளுமன்ற உறுப்பினர்
மஹிந்தானந்த அளுத்கமகே, எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லச்மன்
கிரியெல்லவிடம் சவால் ஒன்றையும் விடுத்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின்; நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்துடன்
இணைந்தால், லச்மன் கிரியெல்ல, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து
விலகவேண்டும் என்றும் அளுத்கமகே சவால் விடுத்துள்ளார்.
போலி செய்தி
ஐக்கிய மக்கள் சக்தியில் கிரியெல்ல மற்றும் சஜித் பிரேமதாச போன்ற நாடாளுமன்ற
உறுப்பினர்கள் மாத்திரமே இருப்பார்கள், மற்றவர்கள் அனைவரும் விரைவில்
அரசாங்கத்துடன் இணைந்து விடுவார்கள் என்றும் மஹிந்தானந்த அளுத்கமகே
தெரிவித்துள்ளார்.
எனினும் தமது கட்சியினர் அரசாங்கத்துடன் இணையமாட்டார்கள் என்று லச்மன்
கிரியெல்ல கூறினார்.
எனினும் மஹிந்தானந்தவின் சவாலுக்கு பதிலளிக்காத அவர், அரசாங்கத்துடன் தமது
கட்சி உறுப்பினர்கள் இணைவது பொய்யான செய்தி என்று தெரிவித்துள்ளார்.