அருள்மிகு கல்யாண வீரபத்திரர் திருக்கோயில், ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், நாராயணவனத்தில் அமைந்துள்ளது. நாராயணபுரத்தை ஆகாசராஜன் ஆண்டு வந்தார். பெருமாள் பக்தரான அவருக்கு புத்திரபாக்கியம் இல்லை. புத்திரகாமேஷ்டி யாகம் நடத்த ஆயத்தமானார். யாகசாலை அமைப்பதற்காக நிலத்தைச் சீர்படுத்தியபோது, பூமிக்கு கீழே ஏர் கலப்பையில் பட்டு ஒரு பெட்டி வெளிப்பட்டது. அப்பெட்டியில், தாமரையின் மத்தியில், பெண் குழந்தையைக் கண்டான் மன்னன். பூமாதேவியின் அம்சமான அக்குழந்தை, அலர் (தாமரை) மேல் இருந்ததால், “அலர்மேல்மங்கை” என்று பெயர் சூட்டினான் மன்னன். தாமரைக்கு […]