கையில் இருக்கும் ரெண்டே சான்ஸ்… இதுதான் கடைசி… ஓபிஎஸ் எடுக்கப் போகும் ’தில்’ முடிவு!

தலைமை பொறுப்பேற்க அதிமுக கிட்டதட்ட கவுண்டர் கட்சியா? எனக் கேட்கும் அளவிற்கு நிலைமை மாறிவிட்டது. அப்படியெனில் காலங்காலமாக அதிமுகவை நம்பியிருக்கும் முக்குலத்தோருக்கு இந்த கட்சியில் முக்கியத்துவம் இல்லையா? என்ற பார்வையை அரசியல் விமர்சகர்கள் முன்வைக்கின்றனர். என்னதான் இந்த சமூகத்தினருக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தி தந்தாலும் அதிகாரம் மையம் என்பது எடப்பாடியிடம் மட்டும் தான் என்பதில் சந்தேகமில்லை.

தவிக்கும் முக்குலத்தோர்

இந்த சூழலில் ஏமாற்றத்தில் இருக்கும் முக்குலத்தோருக்கு விடிவெள்ளியாக

வந்து நிற்பாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்புகள் அடுத்தடுத்து ஏமாற்றம் அளித்து வரும் நிலையில், இறுதி வரை சட்டப் போராட்டம் நடத்தி ஒருகை பார்த்துவிடுவதில் ஓ.பன்னீர்செல்வம் உறுதியாக நிற்கிறார். இதற்கிடையில் அதிமுக உடனான கூட்டணியை அமித் ஷா உறுதி செய்தது,

கடுப்பாக்கிய பாஜக

பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமிக்கு அண்ணாமலை வாழ்த்து சொன்னது என அடுத்தடுத்த சம்பவங்கள் ஓபிஎஸ்க்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. ஏனெனில் அவர் பெரிதும் நம்பியிருந்தது டெல்லியை தான். நீதிமன்றம் கைவிட்டாலும் எடப்பாடியின் பொதுச் செயலாளர் பதவியை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்காவிட்டால் மீண்டும் சிக்கல் வரும்.

தேர்தல் ஆணையத்தில் முறையீடு

அப்போது தனக்கான இடம் நிச்சயம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார். எனவே டெல்லியின் அதிகார மட்டம் மூலம் தேர்தல் ஆணையத்தில் கிடுக்குப்பிடி போட ஓபிஎஸ் திட்டமிட்டிருந்தார். நடப்பதை எல்லாம் பார்த்தால் சூழல் தனக்கு சாதகமாக இல்லை என உணர்ந்து கொண்டார். தற்போதைய சூழலில் ஓபிஎஸ் கையில் இருக்கும் கடைசி இரண்டு ஆயுதங்கள் தேர்தல் ஆணையமும், தனிக்கட்சியும் தான் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

தனிக்கட்சி தொடங்கும் திட்டம்

இதில் டெல்லி கைவிட்டு விட்டால் தேர்தல் ஆணைய வாய்ப்பு கைநழுவி சென்றுவிடும். அதேசமயம் தனிக்கட்சி தொடங்குவது முழுக்க முழுக்க ஓபிஎஸ் கையில் தான் இருக்கிறது. டிடிவி தினகரன்,

ஆகியோருடன் கூட்டணி சேர்ந்து கொண்டு தென் மாவட்டத்தில் தனக்கிருக்கும் செல்வாக்கை நிரூபித்து காட்டலாம். முக்குலத்தோரின் அதிருப்தியை போக்கும் வண்ணம், அவர்களின் நம்பிக்கை நாயகனாக உயர்ந்து நிற்கலாம்.

வாக்கு வங்கி அரசியல்

இந்த சமூக வாக்குகள் என்பது 12 மாவட்டங்களில் உள்ள 70 தொகுதிகளில் சுமார் 8 சதவீத அளவிற்கு இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இவை வெற்றியை தீர்மானிக்கும் வாக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தனிக்கட்சி முடிவு சரியாக இருக்கும் என்பது ஒருசாராரின் கருத்து. ஆனால் ஓபிஎஸ்சை பொறுத்தவரை நீதிமன்றத்தில் தனக்கான வாய்ப்புகள் இன்னும் இருக்கின்றன.

மக்களவை தேர்தல்

அதன்பிறகு தேர்தல் ஆணையம் செல்வோம். அங்கேயும் நினைத்தது நடக்கவில்லை எனில் பின்னர் பார்த்து கொள்ளலாம் என்று கூறிவிட்டாராம். வரும் 2024 மக்களவை தேர்தலுக்கு முன்பாக ஓபிஎஸ் தீர்க்கமான ஒரு முடிவை எடுப்பாரா? இல்லை தள்ளி போடுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.