அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் கைது: ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரம்!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு (Donald trump) டிரம்ப்புக்கு எதிராக ஆபாச பட நடிகை ஸ்டோர்னி டேனியல்ஸ்க்கு ( stormy daniels) பணம் கொடுத்தது உள்ளிட்ட 34 புகார்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் இன்று அவர் கைது செய்யப்பட்டார்.

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
பாலியல் புகார்!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை சுற்றி வரும் சர்ச்சைகளுக்கு எப்போதும் குறைவிருக்காது. அவர் மீது பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் புகார் தெரிவித்ததோடு, வீடியோ ஆதாரங்களையும் வெளியிட்டனர்.

ஸ்டோர்னி டேனியல்ஸ் (stormy daniels) விவகாரம்!

இதனிடையே ஆபாச பட நடிகை ஸ்டோர்னி டேனியல்ஸ் டொனால்டு டிரம்புடனான தனது உறவு குறித்து அவர் வெளியிட்ட புத்தகத்தில் பதிவு செய்திருந்தார். இந்த குற்றச்சாட்டை எல்லாம் டிரம்ப் திட்டவட்டமாக மறுத்தார். 2016ஆம் ஆண்டு, அமெரிக்க அதிபர் தேர்தல் சமயத்தில், இந்த குற்றச்சாட்டு வெளியானது.

வீடு மாறும் உதயநிதி: அப்பாவுடன் இருப்பதில் என்ன பிரச்சினை?

வழக்கின் பின்னணி என்ன?

அதிபர் தேர்தல் நடைபெற இருந்த சூழலில் ஸ்டோர்னி டேனியல்ஸ் உடனான பழக்கம் வைரலானது. அது டிரம்பிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து ஸ்டோர்மி டேனியல்ஸை பேச விடாமல் இருக்க 1 லட்சத்து 30 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் டிரம்ப் வழங்கியதாக புகார் எழுந்தது.

குற்றவியல் வழக்கு பதிவு

அந்த தொகை டிரம்பின் தேர்தல் வரவு-செலவு கணக்கில் சட்டரீதியிலானதாக பதிவு செய்யப்பட்டிருப்பதாக குற்றவியல் வழக்கு பதியப்பட்டுள்ளது. அந்த குற்றவியல் வழக்கில் டொனால்ட் டிரம்பிற்கு எதிரான ஆவணங்கள் உறுதியாக உள்ளதாகவும், அவர் விரைவில் கைது செய்யப்படுவார் எனவும் தகவல்கள் வெளியானது.

பரபரக்கும் நியூயார்க் நகரம்.. தனி விமானத்தில் வந்திறங்கிய டொனால்டு டிரம்ப்.. மாட்டப்படுமா “கைவிலங்கு”

நீதிமன்றத்தில் ஆஜர்!

இந்த நிலையில் அவர் விரைவில் சரணடைய உள்ளதாக கூறப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதற்காக டிரம்ப் நியூயார்க் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். அங்கு அவர் சட்டமுறைப்படி கைது செய்யப்பட்டார். ‘பெலனி’ குற்றத்தின் கீழ் ஒருவர் நீதிமன்றத்தில் சரணடைய வரும் போது, அவருக்கு கைவிலங்கு பூட்ட வேண்டும். ஆனால் அவருக்கு கை விலங்கு மாட்டப்படவில்லை. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நரகத்திற்கு செல்லும் அமெரிக்கா

தனது கைது குறித்து கருத்து தெரிவித்துள்ள டிரம்ப், “அமெரிக்காவில் எனக்கு இப்படி நடக்கும் என நான் எதிர்பார்க்கவே இல்லை. வழக்கில், குறிப்பிட்ட புகார்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. நான் குற்றம் செய்யவில்லை. நம் நாடு நரகத்திற்கு போகிறது. நான் செய்த ஒரே குற்றம், நம் நாட்டை அழிக்க நினைப்பவர்களுக்கு எதிராக அச்சமின்றி பாதுகாத்ததுதான்” என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.