வாஷிங்டன்: கிரிமினல் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் முதல் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், முதன்முறையாக நியூயார்க் நீதிபதி முன் செவ்வாய்க்கிழமை ஆஜரானார். மன்ஹாட்டன் குற்றவியல் நீதிமன்றத்தில் தனக்கு எதிராக சுமத்தப்பட்ட 34 குற்றச்சாட்டுகளை டிரம்ப் மறுத்துள்ளார். இதில், மூன்று வழக்குகள் ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்தது தொடர்பானவை. குறிப்பாக 2016 அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆபாச நட்சத்திரம் ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம் கொடுத்த விவகாரம் டிரம்பை சிக்கலில் ஆழ்த்தியுள்ளது. நீதிமன்றத்திற்குள் நுழையும் முன் டிரம்ப் பொதுமக்களை கைகுலுக்கி வரவேற்றார். நீதிமன்றத்தில் அவர் காவலில் வைக்கப்பட்டார். எனினும், ஒரு மணி நேர விசாரணைக்குப் பிறகு டிரம்ப் விடுவிக்கப்பட்டார். இதில் முக்கியமான கேள்வி என்னவென்றால், இந்த வழக்கின் தாக்கம் 2024 அதிபர் தேர்தலில் டிரம்பிற்கு எந்த விதமான பாதிப்பை கொடுக்கும் என்பது தான்…
நீதிபதிகள் டிரம்ப் மீது செவ்வாய்கிழமை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் ‘விசாரணை’ துவங்கும். இந்த காலகட்டத்தில், வழக்கறிஞர்கள் பிரதிவாதிக்கு எதிராக புலனாய்வாளர்கள் சேகரித்ததற்கான ஆதாரங்களை பாதுகாப்பு குழுவிற்கு வழங்குகிறார்கள். டிரம்ப் வழக்கின் அடுத்த விசாரணை டிசம்பர் 4ஆம் தேதி நடைபெறும். அத்தகைய சூழ்நிலையில், டிரம்பின் வழக்கறிஞர்களுக்கு போதுமான நேரம் கிடைக்கும். சாட்சியங்களை சவால் செய்ய குற்றச்சாட்டை நிராகரிக்க நீதிமன்றத்தை கோரலாம். இனி வழக்கு விசாரணையில் அவரின் தண்டனை உறுதியானால் அதிகபட்சம் சுமார் 136 ஆண்டுகாலம் சிறையில் இருக்கும்படி வலுவான தண்டனை வரை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க தகவல்கள் தெரிவிக்கின்றன
மேலும் படிக்க | நீதிமன்றத்தில் சரணடைந்தார் டிரம்ப்… அமெரிக்காவில் பரபரப்பு!
அதிபர் தேர்தலில் போட்டியிட முடியுமா?
2024 அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக டிரம்ப் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறார். அமெரிக்க அதிபர்த் தேர்தல் பிரசாரத்தின் போதும், வழக்கு விசாரணைகளின் போது தேவைப்பட்டால் சட்டப்பூர்வமாக ஆஜராக வேண்டும். அதிபர் தேர்தலின் போது டிரம்ப் ஒரு மாதத்திற்கு தினமும் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டி இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். நீதிமன்ற நடைமுறைகள் அல்லது சாத்தியமான சிறைத்தண்டனைகளும் டிரம்பின் பிரச்சாரத்திற்கு தடையாக இருக்கலாம். மேலும் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர் தேர்தலில் போட்டியிடுதில் சிக்கல்களை சந்திக்கக் கூடும். இருப்பினும், டிரம்ப் அதிபராக போட்டியிடும் தகுதியை பெறுவார் என்கின்றனர் நிபுணர்கள்.
எட்டு கார்கள் வாகன பேரணியுடன் நீதிமன்றத்தை அடைந்த ட்ரம்ப்
ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை நியூயார்க் நீதிமன்றத்தை அடைவதற்கு முன்பாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. டிரம்ப் எட்டு கார்கள் கொண்ட பேணியில் நீதிமன்றத்தை அடைந்தார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் கைது செய்யப்பட்டார். டிரம்ப் கைது செய்யப்பட்ட சிறிது நேரத்துக்குப் பிறகு, அவர் குற்றவாளி இல்லை என்று கூறி டி-சர்ட் அணிந்திருந்த ஒரு புகைப்படத்தை அவரது பிரச்சாரக் குழுவினர் வெளியிட்டனர். நீதிமன்ற அறை கட்டிடத்தின் 15 வது மாடியில் அமைந்துள்ளது, ஆனால் டிரம்ப் நீதிமன்றத்திற்கு வந்த 70 நிமிடங்களுக்குப் பிறகு நீதிமன்ற அறையை அடைந்தார். அவர் (டிரம்ப்) குற்றவாளி இல்லை என்று நீதிமன்றத்தில் நிரூபிப்போம் என்று டிரம்பின் வழக்கறிஞர் கூறினார்.
மேலும் படிக்க | நான் திரும்பி வந்து விட்டேன்… முகநூலில் பதிவிட்ட டொனால்ட் டிரம்ப்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ