தாயின் உடலை 13 ஆண்டுகளாக வீட்டில் வைத்து பாதுகாத்து வந்த நபர்!

தாய் இறந்த உடல்: ஒருவரின் மரணத்திற்குப் பிறகு, அவரது உடலை நீண்ட நேரம் வெளியில் வைக்க முடியாது. அதிகபட்சம் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள், அதன் பிறகு இறந்த உடலை வைக்க வேண்டும் என்றால், அதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டிருக்க வேண்டும். அதையும் தாண்டு மாதக்கணக்கில் அல்லது வருடக் கணக்கில் வைக்க வேண்டூம் என்றால், அது பதப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். இந்நிலையில், நினைத்து பார்க்கவே முடியாத ஒரு அதிர்ச்சியான செயலை ஒரு நபர்  செய்துள்ளார். இந்த நபர் தனது தாயின் கல்லறையை தோண்டியதோடு மட்டுமல்லாமல், இறந்த உடலை வெளியே எடுத்து 13 ஆண்டுகளாக தனது வீட்டின் சோபாவில் வைத்திருந்தார்.

95 வயதில் காலமான தாய்

உண்மையில், இந்த சம்பவம் போலந்தில் நடந்த சம்பவம். தென்மேற்கு போலந்தின் ராட்லினில் வசிக்கும் இந்த நபரின் பெயர் எல் மரியன் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த நபருக்கு 76 வயது. அண்மையில் உறவினர் ஒருவர் அந்த நபரின் இல்லத்திற்கு சென்றிருந்த போது இந்த சம்பவம் அம்பலமானது. சுமார் 13 வருடங்களுக்கு முன்னர் 2010ஆம் ஆண்டு இவரின் தாயார் தனது 95ஆவது வயதில் மரணம் அடைந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | உயிருடன் எரிக்கப்பட்ட 1,60,000 பேர்; கால் வைக்கும் இடமெல்லாம் மனித எலும்புகள்!

கல்லறையில் இருந்து சடலத்தை தோண்டி எடுத்த நபர்

தாயை பிரிந்து தவித்த அந்த நபர் மிகவும் சோகமடைந்து தாயின் சடலத்தை கல்லறையில் இருந்து கொண்டு வந்துள்ளார். இதை அவர் தனது தாயார் இறந்த சில மணி நேரங்களில் புதைக்கப்பட்ட நிலையில், உடனேயே இதனை செய்தார். இறந்த உடலை புதைத்த உடனேயே தோண்டி எடுத்து வீட்டிற்கு கொண்டு வந்து, அங்கு ரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டு, சில ரசாயனங்கள் தடவி, வீட்டின் சோபாவில் மம்மியை போன்று பதப்படுத்தி பாதுகாத்து வந்திருக்கிறார்.

தாயை பிரிந்த சோகம்

தாயிடம் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக இப்படி அவர் செய்ததாக கூறப்படுகிறது. இதற்குப் பிறகு, இந்த நபர் தனது தாயின் உடலுடன் தினமும் பேசிக் கொண்டிருந்தார். சில நாட்களுக்கு முன்பு, அந்த நபரின் உறவினர் ஒருவர் திடீரென அவரது வீட்டிற்கு வந்தபோது, ​​​​அவர் எதிரில் சோபாவில் தாயின் சடலம் கிடந்தது. முதலில் அதிர்ச்சியடைந்த அவர், விசாரித்தபோது முழு விஷயமும் வெளிச்சத்துக்கு வந்தது. பின்னர் சம்பவத்தை அடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை பரிசோதிக்க மன நல ஆலோசகரும் வரவழைக்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க | மரணம் நெருங்கும் போது ஏற்படும் உணர்வுகள் என்ன… ஆஸ்திரேலியாவில் ஒரு பகீர் அனுபவம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.