Samantha:பிரபல ஹீரோ பட ஆடிஷனுக்கு சென்ற சமந்தா: உயரம் பத்தலனு ரிஜெக்ட் செய்த இயக்குநர்

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார் சமந்தா. அவருக்கு திருமணமான பிறகும் மார்க்கெட் அடி வாங்கவில்லை. அதை பார்த்து பல ஹீரோயின்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார்கள்.

காதல் கணவரான நாக சைதன்யாவை பிரிந்த பிறகு படங்கள், வெப் தொடர் என ஓடியோடி நடித்துக் கொண்டிருக்கிறார் சமந்தா. மயோசிடிஸ் எனும் அரிய வகை நோயில் இருந்து குணமடைந்து வருகின்றபோதிலும் அதை நினைத்து ஓரமாக உட்கார்ந்து கவலைப்படாமல் நேரம் காலம் பார்க்காமல் ஷூட்டிங்கில் கலந்து கொண்டிருக்கிறார்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

குணசேகர் இயக்கத்தில் சமந்தா நடித்திருக்கும் சாகுந்தலம் படம் ஏப்ரல் 14ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இதையடுத்து பல்வேறு நகரங்களுக்கு சென்று சாகுந்தலம் படத்தை விளம்பரம் செய்து வருகிறார் சமந்தா.

கேரள மாநிலம் கொச்சிக்கு சென்ற சமந்தாவிடம் திலீப்பின் கிரேஸி கோபாலன் படத்தில் நிராகரிக்கப்பட்டது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது,

பல ஆடிஷன்களில் என்னை நிராகரித்தது நினைவிருக்கிறது. அதை எல்லாம் சவுகரியமாக நான் மறந்துவிட்டேன். ஆனால் நடிக்க வந்த புதிதில் பல முறை நிராகரிக்கப்பட்டது நினைவிருக்கிறது.

Samantha: தான் நடிக்க வேண்டிய படத்தில் நடிக்கும் ரஷ்மிகாவை வாழ்த்திய சமந்தா: ரொம்ப பெரிய மனசுமா

மலையாள நடிகர்களுடன் சேர்ந்து நடிப்பது நடிப்பு பள்ளிக்கு செல்வது போன்று ஆகும். அனைத்து மலையாள நடிகர்களுமே சிறப்பாக நடிக்கிறார்கள். சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஃபஹத் ஃபாசிலின் நடிப்பை பார்த்து வியந்தேன் என்றார்.

கிரேஸி கோபாலன் குறித்து திலீப் முன்பு கூறியதாவது, என் பட வாய்ப்பு கிடைக்காமல் போன பிறகு ஒரு பெண் பயங்கரமாக அழுதார். இதை நினைத்து கவலைப்பட வேண்டாம், கடினமாக முயற்சி செய்யுங்கள் என்று நான் அந்த பெண்ணிடம் கூறினேன். நான் அப்படி சொன்ன இரண்டு பேர் தற்போது தென்னிந்திய சினிமாவில் பெரிய ஆட்களாக இருக்கிறார்கள் என்றார்.

கிரேஸி கோபாலன் படத்திற்கு தேர்வு செய்யப்படாத நடிகை சமந்தா தான் என அந்த படத்தின் இயக்குநர் தீபு கருணாகரனும் தெரிவித்தார். உயரமான ஹீரோயின் தேவைப்பட்டதால் சமந்தாவை தேர்வு செய்யவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

சாகுந்தலம் படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸாகவிருக்கிறது. அதனால் படத்தை பல்வேறு நகரங்களில் விளம்பரம் செய்து வருகிறார் சமந்தா.

Samantha: நாக சைதன்யா, சோபிதா காதல் பற்றி நான் அப்படி சொல்லவே இல்ல: சமந்தா

இதற்கிடையே நாக சைதன்யா, சோபிதா துலிபாலா காதலிப்பது குறித்து சமந்தா காட்டமாக விமர்சித்ததாக செய்தி வெளியானது. அதை பார்த்த சமந்தாவோ, நான் அப்படி சொல்லவே இல்லை என்றார்.

சாகுந்தலம் படம் தொடர்பான பேட்டி ஒன்றில் தன் காதல் திருமணம் தோல்வியில் முடிந்தது பற்றியும் பேசினார். நான் 100 சதவீதம் ஈடுபாட்டுடன் இருந்தேன். ஆனாலும் திருமண வாழ்க்கை நிலைக்கவில்லை என்றார்.

வேறு யாரையாவது காதலிக்குமாறு ரசிகை ஒருவர் ட்விட்டரில் கூறியதற்கு, உங்களை போன்று என்னை வேறு யார் நேசிப்பார்கள் என்று கூறி அசர வைத்துவிட்டார் சமந்தா. கணவரை பிரிந்த பிறகு கெரியரில் படுபிசியாகிவிட்டார் சமந்தா என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.