தெலுங்கானா மாநில பா.ஜ., தலைவர் கைது| Telangana BJP Chief In Police Custody, Party Says “Illegal Arrest”

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

ஹைதராபாத்: தெலுங்கானா மாநில பா.ஜ., தலைவர் பண்டி சஞ்சயை, அம்மாநில போலீசார் கைது செய்தனர். பிரதமர் மோடி, அம்மாநிலத்திற்கு வர உள்ள நிலையில், இந்த கைது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கரீம்நகர் தொகுதி எம்.பி., ஆக இருக்கும் அவரை கைது செய்வதற்கான காரணத்தை கூறாமல் போலீசார் அழைத்து சென்றனர். பல்வேறு போலீஸ் ஸ்டேசன்களுக்கு அழைத்து செல்லப்பட்டார். இதனால், அவரது பாதுகாப்பு குறித்து பா.ஜ.,வினர் அச்சம் தெரிவித்துள்ளனர். இவரை கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்திலும் பா.ஜ., தரப்பில் முறையிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து போலீஸ் வெளியிட்ட அறிக்கையில், கேள்வித்தாள் கசிவு விவகாரத்தில் கைது செய்யப்பட்டார் எனக்கூறியுள்ளது. வரும் சனிக்கிழமை, பிரதமர் மோடி தெலுங்கானாவிற்கு வர உள்ள நிலையில், இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.