திருச்சி மாவட்டம் மாத்தூர் அருகே மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த கேந்திர வித்யாலயா பள்ளி வேன், சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்ததில், அதிலிருந்த 22 பேர் காயமடைந்தனர்.
குறுகலான சாலையில் வேனை வேகமாக இயக்கியதால் விபத்து நேரிட்டதாக தெரியவந்துள்ள நிலையில், வேன் டிரைவர் பக்ருதீன் என்பவர் விசாரணைக்குப்பிறகு கைது செய்யப்படுவார் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.