அமித் ஷா – தம்பிதுரை சந்திப்பு; இரட்டை இலை பிளஸ் ஓபிஎஸ் டீலிங்… கசிந்த அரசியல் சீக்ரெட்!

அதிமுகவின் உச்சபட்ட அதிகாரம் கொண்ட நாற்காலியில்

அமர்ந்துவிட்டார். பொதுச் செயலாளர் பதவி கிடைத்துவிட்டதால் எல்லா பிரச்சினைகளும் தீர்ந்து விட்டதா? என்றால் இல்லை. சட்டப் போராட்டம் எஞ்சியுள்ளது. தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வேண்டும். மக்கள் மன்றம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இன்னும் சொல்லப் போனால் ஏ பார்ம், பி பார்மில் கையெழுத்து போட எப்போது அங்கீகாரம் கிடைக்கிறதா?

தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

அப்போது தான் பொதுச் செயலாளர் என்ற பதவியும் உறுதிபடுத்தப்படும். இத்தகைய சூழலில் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக எம்.பி

இன்று சந்தித்து பேசினார். வழக்கம் போல் மரியாதை நிமித்தமான சந்திப்பு எனக் கூறிவிட்டனர். இருப்பினும் அரசியல் பேசியிருப்பர் என்பதை மறுப்பதற்கில்லை. எதற்காக அமித் ஷாவை போய் ஏன் சந்திக்க வேண்டும் என்ற கேள்வி எழலாம்.

கர்நாடக தேர்தல்

பாஜகவின் தேசிய தலைவராக ஜே.பி.நட்டா இருக்கலாம். அதிகார மையத்தில் பிரதமராக மோடி இருக்கலாம். ஆனால் அமித் ஷாவை பிடித்தால் தான் எதுவும் நடக்கும் என்ற நிலை நீடிக்கிறது. அந்த வகையில் டெல்லி சந்திப்பு குறித்து பல விஷயங்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. அதாவது, கர்நாடக சட்டமன்ற தேர்தல் வரும் மே 10ஆம் தேதி நடைபெறுகிறது. மே 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

எடப்பாடிக்கு அதிகாரம்

இதில் 2 தொகுதிகளில் போட்டியிட அதிமுக ஆர்வம் காட்டி வருகிறது. எம்.ஜி.ஆர் காலத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கர்நாடகாவில் இருந்துள்ளனர். இந்த சூழலில் கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலை ஒட்டி களப் பணிகளை அதிமுக தொடங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது. எடப்பாடி ஏ பார்ம், பி பார்மில் கையெழுத்து போடும் அதிகாரம் பெற்றால் தான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும்.

இரட்டை இலை

அது கர்நாடகாவில் கூடுதல் வாக்குகளை பெற நிச்சயம் கைகொடுக்கும். ஒட்டுமொத்தமாக பார்க்கையில் தேர்தல் ஆணையத்திடம் இருந்து எடப்பாடி பழனிசாமிக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும். இதையொட்டியே டெல்லி சந்திப்பு நிகழ்ந்திருப்பதாக சொல்லப்படுகிறது. கர்நாடகாவில் அதிமுக போட்டி என்பது எடப்பாடிக்கு கூடுதல் சிறப்பம்சமாக பார்க்கப்படும்.

திடீர் ரத்து

இது கட்சியில் அடுத்தகட்ட நகர்வுகளுக்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் அதிமுக செயற்குழு கூட்டம் ஏப்ரல் 7ஆம் தேதி நடத்தப்படும் என்ற அறிவிப்பு எந்தவித காரணமும் சொல்லப்படாமல் ரத்து செய்யப்பட்டது. இதன் பின்னணியில் சில பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவது தான் காரணம் எனச் சொல்லப்படுகிறது.

மீண்டும் ஓபிஎஸ்

பாஜகவை பொறுத்தவரை ஒருங்கிணைந்த அதிமுக என்பதை தான் மீண்டும் மீண்டும் அறிவுறுத்தி வருகிறது. அப்படி பார்த்தால் ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் சேர்க்க முடியாது என விடாப் பிடியாக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இந்த நிலைப்பாட்டில் மாற்றம் வந்துவிட்டதா? தற்போதைய முடிவு என்ன? என்பது பற்றி சில விஷயங்களை தம்பிதுரை மூலம் சொல்லி அனுப்பியிருக்கலாம் என்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.