கணினிப் பூக்கள் கவிதைத் தொகுப்பு – பகுதி 31 பா. தேவிமயில் குமார் கோடை மழை வெப்பம் மேலெழும் விமரிசையில் ஒவ்வொரு துளியின் வீழலும் வெற்றி விழாவாக, யாரும் அறியா அந்தர வேர் ஈரம், அகமெல்லாம் பூக்கும் பருவ பெண்ணின் புது நாணமாக, மண் படிந்த மரங்கள் நீராடும் மங்கள ஈரம், புனித நீராட்டு விழா, பூமிப் பெண்ணுக்கு, வணிக சேவையில் வெளிர்மேக அங்காடியுள், வானவில் ஆடை, வண்ண தாவணி உடனடியாக விற்றுத் தீர்கிறது, வெய்யோன் ஓய்வெடுக்கும் […]