எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார் தளபதி விஜய். அந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரிலும் நடந்தது. இதையடுத்து சென்னை திரும்பியது படக்குழு.
மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கியிருக்கிறது. 17 நாட்கள் சென்னையில் படப்பிடிப்பை நடத்தி முடித்துவிட்டு ஹைதராபாத்துக்கு கிளம்புகிறது படக்குழு.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
சென்னையில் செட் போட்டு சில காட்சிகளை படமாக்கி வருகிறாராம் லோகேஷ் கனகராஜ். லியோ படக்குழு ஹைதராபாத் கிளம்புகிறது என்பதை கேள்விப்பட்டதுமே விஜய் ரசிகர்களுக்கு ஒரே கவலை தான்.
சென்னையிலேயே வெயில் மண்டையை பிளக்கிறது. ஹைதராபாத்தில் சொல்லவே வேண்டாம். சூரியன் உச்சத்தில் இருக்கும். அப்படி இருக்கும்போது கோடை காலத்தில் போய் ஹைதராபாத்துக்கு தளபதியை அழைத்துச் செல்கிறீர்களே. அவர் தாங்குவாரா?. பார்த்து படப்பிடிப்பை நடத்துங்கள்.
தளபதி பத்திரம். முடிந்த வரை அவரை வெயிலில் நிற்க வைத்து வாட்டி எடுக்காதீர்கள் என லோகேஷ் கனகராஜிடம் கூறி வருகிறார்கள் விஜய் ரசிகர்கள்.
Leo: பட்டது போதும், இனிமே வேணாம்டா தம்பி: லோகேஷ் கனகராஜிடம் கறாராக சொன்ன விஜய்
ஹைதராபாத்தில் அவுட்டோர் ஷூட்டிங் நடத்தத் தான் லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டிருந்தார். ஆனால் காஷ்மீரில் அவுட்டோர் ஷூட்டிங் நடத்த படக்குழு ரொம்ப கஷ்டப்பட்டிருக்கிறது. இதையடுத்தே காஷ்மீரில் பட்டதை மறந்துட்டியா தம்பி. ஹைதராபாத்தில் மரியாதையாக செட் போட்டு ஷூட்டிங் நடத்து என லோகேஷ் கனகராஜிடம் கூறியிருக்கிறாராம் விஜய்.
50 சதவீத படப்பிடிப்பை முடித்துவிட்டார் லோகேஷ். இன்னும் 60 நாட்கள் தான் ஷூட்டிங் இருக்கிறது. அதையும் விறுவிறுப்பாக நடத்தி முடித்து திட்டமிட்டபடி அக்டோபர் 19ம் தேதி படத்தை ரிலீஸ் செய்யும் எண்ணத்தில் இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
படப்பிடிப்பில் தீவிரமாக இருக்கும் லோகேஷோ அது குறித்து அப்டேட் கொடுப்பதில் தீவிரம் காட்டவில்லை. இந்நிலையில் தான் விருது விழா ஒன்றுக்கு வந்த லோகேஷை பார்த்தவர்கள், இவரிடம் இப்போ அப்டேட் வாங்கினால் தான் உண்டு என்று கேட்டார்கள்.
அவரோ, லியோ ஒரு பக்கா மாஸ் ஆக்ஷன் படம் என்றார். அது சரி லோகி, இது உங்களின் எல்.சி.யூ. கதையா என்று கேட்டதற்கு. அதை பற்றி மட்டும் தற்போது எதுவும் கேட்காதீர்கள் என்று சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார். யாருகிட்ட அப்டேட் கேட்கப் பார்க்குற, ராஸ்கல் நான்லாம் வேற ரகம் என கிளம்பிவிட்டார்.
லோகேஷ் சொல்லாவிட்டால் என்ன அதே விருது விழாவுக்கு வந்திருக்கும் த்ரிஷாவிடம் நைசா பேசி மேட்டரை வாங்கிவிடலாம் என்று நினைத்தார்கள். ஆனால் இப்படி எல்லாம் நடக்கும் என்பதை எதிர்பார்த்த லோகேஷோ, மேடைக்கு போனோமா விருதை வாங்கினோமானு வந்துவிட வேண்டும். லியோ பற்றி வாய் திறக்கக் கூடாது என்று த்ரிஷாவிடம் சொல்லித் தான் அழைத்து வந்திருக்கிறார்.
லோகேஷ் செய்த காரியத்தால் த்ரிஷாவிடம் இருந்து எந்த தகவலையும் பெற முடியவில்லை. லோகேஷ் கதை சொல்லாவிட்டாலும் லியோ எல்.சி.யூ. கதை தான் என விஜய் ரசிகர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
Ajith, Vijay: அஜித், விஜய் பற்றி முருகதாஸே இப்படி சொல்லிட்டாரே: ரசிகர்கள் கவலை
மேலும் படத்தில் த்ரிஷா கொலை செய்யப்படுவார் என்பதில் ரசிகர்களுக்கு அப்படியொரு நம்பிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.