குடும்ப அட்டைதாரர்களுக்கு புதிய வசதி; இனிமே ஆன்லைன் தான்… அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பலே ஏற்பாடு!

தமிழக அரசு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பல்வேறு விஷயங்களை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட அல்லது தொலைந்து போன குடும்ப அட்டைகளுக்கு பதிலாக நகல் மின்னணு குடும்ப அட்டையினை குடும்ப அட்டைதாரர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்காக இணையதளத்தில் விண்ணப்பித்து பெறும் முறை கடந்த 2020ஆம் ஆண்டு முதல் அமலில் உள்ளது.

குடும்ப அட்டைகளின் நகல்

இணையதள வழியில் விண்ணப்பித்தாலும் அதற்குரிய தொகையை செலுத்தவும், மீண்டும் திருத்தப்பட்ட அட்டையை பெறவும் விண்ணப்பதாரர்கள் வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு செல்ல வேண்டும். தற்போது அந்த முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. நகல் குடும்ப அட்டைகளை பெற மண்டலம் அல்லது வட்ட வழங்கல் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் இணைய வழியிலேயே பணம் செலுத்திட முடியும்.

இணைய வழி சேவை

அஞ்சல் வழியிலேயே தங்கள் முகவரிக்கு பெற்றிடும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி குடும்ப அட்டைதாரர்கள் www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் நகல் குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கும் போதே, அட்டைக்கான கட்டணம் 20 ரூபாய் மற்றும் அஞ்சல் சேவைக் கட்டணம் 25 ரூபாய் என மொத்தம் 45 ரூபாயை இணையவழியில் QR code அல்லது Net banking வழியாக செலுத்தி அச்சிடப்பட்ட நகல் குடும்ப அட்டையினை அஞ்சலில் பெற்று கொள்ளலாம்.

Udhayanidhi Stalin

உதயநிதி தொடங்கி வைத்தார்

இந்த திட்டத்தை கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் முன்னிலையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்

இன்று தொடங்கி வைத்தார். இதையடுத்து நியாய விலை கடை பணியாளர்களை பாராட்டி பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது.

பரிசும், சான்றிதழும்

அதாவது, நியாய விலை கடை பணியாளர்களின் பணியை பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு மாநில மற்றும் மாவட்ட அளவில் ரொக்கப் பரிசு மற்றும் நற்சான்றிதழ் வழங்கப்படும் என அமைச்சர் அர.சக்கரபாணி ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி, மாநில அளவில் தேர்வு செய்யப்பட்ட விற்பனையாளர்களில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சீ.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு முதல் பரிசாக 15,000 ரூபாயும்,

முதல் மூன்று பேருக்கு

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பி.நந்தினி அவர்களுக்கு இரண்டாம் பரிசாக 10,000 ரூபாயும் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த ஆர்.மதுபாலன் அவர்களுக்கு மூன்றாம் பரிசாக 5,000 ரூபாயும் வழங்கப்பட்டது. மாநில அளவில் தேர்வு செய்யப்பட்ட எடையாளர்களில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த டி.பாபு அவர்களுக்கு முதல் பரிசாக 10,000 ரூபாயும்,

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த எஸ்.ராஜன் அவர்களுக்கு இரண்டாம் பரிசாக 6,000 ரூபாயும், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த டி.துரைராஜ் அவர்களுக்கு மூன்றாம் பரிசாக 4,000 ரூபாயும் நற்சான்றிதழ்களும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களால் இன்று (05.04.2023) வழங்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.