Actor Vetri Home Tour: நடிச்சதே ஏழு படம் தான்… ஆனா வீடு அரண்மனை மாதிரி இருக்கு… அடேங்கப்பா!

சென்னை: 8 தோட்டாக்கள் திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் வெற்றி.
வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் வெற்றி, சென்னையில் அவரது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
மொத்தமே 7 படங்களில் மட்டுமே நடித்துள்ள வெற்றியின் சொந்த வீடு, சும்மா அரண்மனை மாதிரி உள்ளது.
அவரது ஹோம் டூர் வீடியோ ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

8 தோட்டாக்கள் வெற்றி

2017ம் ஆண்டு வெளியான 8 தோட்டாக்கள் திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் வெற்றி. ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் போலீஸ் கேரக்டரில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார். வெற்றி நடிப்பில் இரண்டாவதாக வெளியான ஜிவி திரைப்படம், அவரது கேரியரில் பெஸ்ட்டாக அமைந்தது. முக்கோண விதி, தொடர்பியல் என அட்டகாசமான த்ரில்லர் ஜானரில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.

 வெற்றியின் ஹோம் டூர்

வெற்றியின் ஹோம் டூர்

8 தோட்டாக்கள், ஜிவி, கேர் ஆஃப் காதல், வனம், ஜோதி, ஜிவி 2, மெமரீஸ் என மொத்தமே 7 படங்களில் நடித்துள்ளார் ஜிவி. கதை தேர்வில் ரொம்பவே கவனம் செலுத்துவதால் குறைவான படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இந்நிலையில் கடந்தாண்டு திருமணமும் முடித்துவிட்டு ஃபேமிலி மேன் ஆகிவிட்ட வெற்றியின் ஹோம் டூர் வீடியோ ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மூன்று மாடியுடன் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த வீட்டின் முன்பகுதியில் 3 கார்களை நிறுத்தி வைத்துள்ளார்.

 வீடா இல்ல அரண்மனையா?

வீடா இல்ல அரண்மனையா?

சினிமாவில் நடிக்க வந்ததும் 60 லட்சம் மதிப்புள்ள கறுப்பு நிற BMW 3 சீரிஸ் வாங்கியுள்ளாராம். கூடவே ஒரு பார்ச்சூனர் கார், திருமணத்திற்கு கிஃப்ட்டாக வந்த மினி கூப்பர் காரையும் தனது வீட்டில் கெத்தாக நிறுத்தி வைத்துள்ளார் வெற்றி. வீட்டின் உள்ளே போனால், கதை கேட்பதற்காக ஒரு மினி ஆபிஸ் உள்ளது. அங்கே தான் அவரும் அவரது அப்பாவும் கதை கேட்டு ஓக்கே சொல்வார்களாம். அடுத்து அப்படியே லிவிங் ஹால் போனால், அது அரண்மனையை கண் முன் வந்து நிறுத்துகிறது. ஸ்டேட் லெவல் அதெல்ட் வீரரான வெற்றியின் கோப்பைகளை அடுக்கி வைக்கவே பெரிய ஷோக்கேஸ்கள் இருக்கின்றன.

 வெற்றியின் பின்னணி தெரியுமா?

வெற்றியின் பின்னணி தெரியுமா?

அதன்பிறகு தனது குடும்பம் குறித்து விவரித்துள்ள வெற்றி, அம்மா, அப்பா, அக்கா, தம்பி, மனைவி குறித்தும் பெருமையாக பேசியுள்ளார். நெல்லையைச் சேர்ந்த வெற்றியின் அப்பா ஒருவகையில் கோபுரம் ஃபிலிம்ஸ் அன்புச் செழியனின் தூரத்து சொந்தம் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் அவரும் மிகப் பெரிய ஃபைனான்சியர் என்பதால், வெற்றியின் படங்களை அவரது அப்பாவே சொந்தமாக தயாரித்துள்ளார். இதனிடையே லிவிங் ஹாலில் இருந்து லிஃப்ட் மூலம் மாடியில் இருக்கும் அவரது ரூம் உள்ளே செல்கிறார் வெற்றி.

 ரூமில் இவ்வளவு வசதியா?

ரூமில் இவ்வளவு வசதியா?

மிகப் பெரிய மெத்தை, ஏசி, எல்.இ.டி டிவி என ரூமையே மினி தியேட்டராக மாற்றி வைத்துள்ளார் வெற்றி. அதுமட்டுமா! ரூம் பக்கத்திலேயே பிரம்மாண்டமான ஜிம் வைத்து தினமும் ஒர்க் அவுட் செய்கிறாராம். அதற்கும் மேலே மாடித் தோட்டம் என சகல வசதிகளையும் தனது வீட்டுக்குள் செட் செய்துள்ளார் வெற்றி. மொத்தமே 7 படங்கள் மட்டுமே நடித்துள்ள வெற்றி, இவ்வளவு பிரம்மாண்டமான வீட்டுக்குச் சொந்தக்காரர் என தெரிந்ததும் ரசிகர்களே அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.