பிரேசில் நாட்டில் தாயார் ஒருவர் கல்லறையில் உயிருடன் புதைக்கப்பட்ட வழக்கில் இதுவரை இருவர் கைதாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நான்கு பிள்ளைகளின் தாயார்
பாதிக்கப்பட்ட அந்த பெண் நான்கு பிள்ளைகளின் தாயார் எனவும், மார்ச் 28ம் திகதி குழு ஒன்று அவரது குடியிருப்புக்குள் அத்துமீறி நுழைந்து அவரை கடுமையாக தாக்கி, குடியிருப்புக்கு வெளியே இழுத்து சென்றுள்ளது.
Credit: by police
பின்னர் கல்லறை ஒன்றில் அவரை உயிருடன் புதைத்து விட்டு அந்த குழு மாயமாகியுள்ளது.
சுமார் 10 மணி நேரம் அந்த கல்லறைக்குள் அவர் உயிருக்கு போராடியுள்ளார்.
இதனிடையே, கல்லறை ஊழியர்கள் சிலர் பெண்ணின் அழு குரல் சத்தம் கேட்டு, உதவ முன்வந்துள்ளனர்.
இந்த நிலையில், பெண் ஒருவரை உயிருடன் கல்லறையில் புதைத்த விவகாரத்தில் விசாரணை முன்னெடுத்த பொலிசார், 20 மற்றும் 22 வயதுடைய இருவரை கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
கைதான இரு இளைஞர்கள்
மேலும், தொடர்புடைய இருவரும் ரியோ டி ஜெனிரோ பகுதிக்கு தப்ப திட்டமிட்டு வந்த நிலையிலேயே கைதானதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
Credit: by police
தொடர்புடைய குழுவினருக்காக தமது குடியிருப்பில் பாதுகாத்துவந்த போதை மருந்து மற்றும் ஆயுதங்களை இடம் மாற்றியதாலையே தாக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது கைதான இரு இளைஞர்களும் ஏற்கனவே, போதை மருந்து மற்றும் ஆயுதங்கள் கடத்தல் தொடர்பில் கைதானவர்கள் எனவும் கூறப்படுகிறது.
இவர்களுடன் மூன்றாவது நபரையும் பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.