ஹூண்டாய் இந்தியா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தனது சிறிய ரக எஸ்யூவி மாடலுக்கான முதல் டீசரை வெளியிட்டுள்ளது. டாடா பஞ்ச், சிட்ரோயன் C3, ரெனோ கிகர், நிசான் மைக்னைட் ஆகியவற்றை ஹூண்டாய் Ai3 எஸ்யூவி எதிர்கொள்ளும்.
சமீபத்தில் இந்த காரின் சாலை சோதனை ஓட்ட படங்கள் வெளியான நிலையில் முதல்முறையாக டீசர் வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளதால் அறிமுகம் அடுத்த சில மாதங்களுக்குள் மேற்கொள்ளப்பட வாய்ப்புள்ளது.
Hyundai Micro SUV
ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் COO திரு தருண் கர்க் பேசுகையில், “ நீங்கள் வெளிய உலகை நினைக்கும் போது, ஆய்வு மற்றும் பயணத்தை நினைக்கும் போது, நீங்கள் எஸ்யூவி பற்றி நினைக்கிறீர்கள். ஹூண்டாய் நிறுவனம் புதிய மொபைலிட்டி அனுபவங்களை தூண்டுவதற்கு முன்னோடியாக இருந்து வருகிறது. மேலும் உங்கள் இடத்தைப் பிடிக்க விரைவில் வரவிருக்கும் புதிய எஸ்யூவி மூலம் வாடிக்கையாளர்களை மீண்டும் உற்சாகப்படுத்த தயாராக உள்ளோம். இந்தியாவின் முன்னணி ஸ்மார்ட் மொபிலிட்டி தீர்வுகள் வழங்குவதனால், வாடிக்கையாளர்களின் மத்தியில் மதிப்பை உயர்த்துவதையும், எங்கள் மிகவும் விரும்பப்படும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான எஸ்யூவி அனுபவத்தை வழங்க உள்ளோம்.
புதிய மைக்ரோ எஸ்யூவி, மேம்பட்ட தொழில்நுட்பம், சிறந்த பாதுகாப்பு மற்றும் வலுவான செயல்திறன் ஆகியவற்றுடன் சிறந்த மொபிலிட்டி அனுபவங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் என குறிப்பிட்டுள்ளார்.
மைக்ரோ எஸ்யூவி காரில் 81 ஹெச்பி பவரை வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பலாம். சிஎன்ஜி ஆப்ஷனிலும் கூடுதலாக எதிர்பார்க்கப்படுகின்றது. விற்பனைக்கு அடுத்த சில மாதங்களில் எதிர்பார்க்கலாம்.