கீழடியில் 9-ம் கட்ட அகழாய்வு பணிகள்..  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.!

கீழடியில் ஒன்பதாம் கட்ட அகழ்வாய்வு பணிகளை முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற 8 கட்ட அகழ்வாய்வு பணிகளின் போது பழங்கால தமிழர்கள் பயன்படுத்திய பழங்கால பொருட்கள் கிடைத்தன. அகழ்வாய்வில் கிடைத்த பொருட்கள் சுமார் 2600 ஆண்டுகள் பழமையானவை என ஆய்வுகள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அகழ்வாய்வு பணிகளின் போது கிடைத்த தொல்பொருட்களை 18.42 கோடி ரூபாய் மதிப்பில் காட்சிப்படுத்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தை கடந்த மார்ச் மாதம் 5-ம் தேதி முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்.

தொடர்ந்து பொதுமக்கள் அருங்காட்சியகத்தை பார் விட்டு வருகின்றனர். இந்த நிலையில் கீழடியில் ஒன்பதாம் கட்ட அகழ்வாய்வு பணிகளை முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைக்கிறார். அதன்படி கீழடி, அகரம், கொந்தகை என 3 இடங்களில் ஒன்பதாம் கட்ட அகழ்வாய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.