சென்னை: சினிமாவில் நடிகராக வருவதற்கு முன்பாக அந்த தமாஸ் ஹீரோவுக்கு ஏகப்பட்ட உதவிகளை செய்து வந்த நண்பர்களை எல்லாம் சமீப காலமாக தன்னை நெருங்க விடாமல் பெரிய தடுப்புச் சுவரையே போட்டு வைத்திருக்கிறார் அந்த தமாஸ் ஹீரோ என பரபரப்பு குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
வாய்ப்புகளுக்காக அலைந்து திரிந்து கொண்டிருந்த காலத்தில் இந்த பையன் நல்லா பண்றானே நிச்சயம் முன்னேறுவான் அவனுக்கு நம்மளால முடிந்த உதவிகளை செய்யலாமே என சில நெருங்கிய நண்பர்கள் பல்வேறு உதவிகளை எந்தவொரு பிரதி பலனும் எதிர்பார்க்காமல் செய்து வந்திருக்கின்றனர்.
முதலில், ஹீரோவான புதிதில் தனக்கு உதவி செய்த நண்பர்களையும் வெல் விஷர்களையும் மதித்தும் அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்தும் வந்த அந்த தமாஸ் ஹீரோ.
சமீப காலமாக தன்னை நெருங்க வேண்டும் என்றால் இந்த இரு தடுப்புச் சுவர்களை தாண்டித் தான் யாராக இருந்தாலும் வர வேண்டும் என முடிவு செய்து தனக்குத் தானே லட்சுமண ரேகையை போட்டுக் கொண்டு அதில் அமர்ந்து விட்டதாக பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.
உதவிய நண்பர்களை மறந்து விட்டார்
நடிகரின் பழைய நண்பர்கள் முன்பை போலவே அவரை நெருங்கவோ பேசவோ நினைத்தாலோ புதிதாக உருவாகி உள்ள அந்த இரு தடுப்புச் சுவர்களும் அவர்களை பக்கமே அண்ட விடுவதில்லை என்கின்றனர். மேலும், நடிகரை தங்களுக்குத் தேவையான நபர்களுடன் மட்டுமே நெருங்க விடுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் கிளம்பி உள்ளன.
இதன் காரணமாக நடிகரின் பழைய நண்பர்கள் சிலர் மிகுந்த மன வருத்தத்தில் ஆளாகி எப்படி எல்லாம் அவருக்கு உதவி செய்திருக்கிறேன். இப்போ கண்டுக்கவே மாட்டேங்கிறாரே என்கிற அளவுக்கு புலம்பித் தவித்து வருவதாக கூறுகின்றனர். இதுபற்றி நடிகருக்குத் தெரியுமா? அல்லது தெரிந்தும் தனது தடுப்புச் சுவர்கள் சொல்வதை மட்டுமே கேட்டுத் தலையாட்டி வருகிறாரா? என்கிற கேள்வி தான் தற்போது கோடம்பாக்கத்தில் கொழுந்து விட்டு எரிகிறது.
இனிமேல், தனது அடுத்த கட்ட வளர்ச்சிக்கு யார் தேவையோ அவர்களை மட்டுமே டச்சில் வைத்துக் கொண்டால் போதும் என்கிற முடிவுக்கே நடிகர் வந்து விட்டதாகவும், அதனால் தான் பழைய சொந்தங்களையும் நண்பர்களையும் அவர்கள் செய்த உதவிகளையும் மறந்து விட்டார் என ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்கள் பேச்சு வாக்குல பரவி வருகின்றன.
சினிமாவில் கூட அவரை வளர்த்து விட்ட பல பேரை தற்போது மதிக்காமல் தூக்கி விட்ட ஏணிகளை காலால் எட்டி உதைத்து விட்டு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து செல்ல நினைத்து வருகிறார் என்றும் ஒரு கட்டத்தில் இதெல்லாம் அவருக்கு மிகப்பெரிய சிக்கலாக மாறும் போது தான் அனைத்து தவறுகளும் புரிய வரும் என்றும் நண்பர்கள் மனவேதனையில் புலம்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Comedy Hero avoids his old friends in recent times: ஆரம்ப கால நண்பர்களை அவாய்டு பண்ணும் தமாஸ் நடிகர் என்கிற குற்றச்சாட்டு கோடம்பாக்கத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.