எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
ஜெயிலர் அண்ணாத்த படம் மிகப்பெரிய தோல்வியை அடைந்த பிறகு இனி ரஜினி படங்களில் நடிக்கமாட்டார் என்ற ஒரு வதந்தி பரவி வந்தது. அதற்கேற்றாற்போல ரஜினி தன் அடுத்த பட அறிவிப்பை வெளியிடாமல் இருந்தார். இதன் காரணமாக ரஜினி படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார் என சிலர் பேசி வந்தனர். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் இளம் இயக்குனரான நெல்சனின் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடிப்பதாக அறிவித்தார் ரஜினி. இக்கூட்டணி முற்றிலும் புதுமையாக இருப்பதால் ரஜினி ரசிகர்கள் இப்படத்தை மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. மோகன்லால், ஷிவ்ராஜ் குமார், ஜாக்கி ஷாரூப் என இந்திய சினிமாவில் இருக்கும் சூப்பர்ஸ்டார் நடிகர்கள் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றனர்
முடிவோடு இருக்கும் ரஜினி அண்ணாத்த படம் மிகப்பெரிய தோல்வியை அடைந்ததும் பலரும் ரஜினியை விமர்சிக்க துவங்கினர். ரஜினியின் டச் போய்விட்டது, இனி அவரின் படங்கள் ஓடாது, எனவே அவர் நடிக்காமல் இருப்பதே நல்லது என கடுமையாக ரஜினியை விமர்சித்தனர். இதையெல்லாம் காதில் வாங்கிய ரஜினி, தான் ஒரு சூப்பர்ஸ்டார் என நிரூபிக்க தற்போது தீயாய் வேலை செய்து வருகின்றார். ஜெயிலர் திரைப்படத்தை மட்டும் வெற்றிப்படமாக கொடுத்தால் போதாது என கருதிய ரஜினி தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகியுள்ளார். லைக்கா தயாரிப்பில் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடித்து வரும் ரஜினி அடுத்ததாக ஜெய் பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கின்றார். இவ்வாறு வித்யாசமான புது கூட்டணியுடன் களமிறங்கும் ரஜினி தொடர் வெற்றிகளை குவிக்க ஆயத்தமாகி வருகின்றார்
பிரம்மாண்டமான ரிலீஸ் நெல்சன் மற்றும் ரஜினி கூட்டணியில் உருவாகும் ஜெயிலர் படத்திற்க்கு ஆரம்பத்தில் இருந்ததை விட தற்போது பல மடங்கு எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. இந்திய சினிமாவில் இருக்கும் மிக முக்கியமான நடிகர்களை ஜெயிலர் படத்தில் களமிறக்கியுள்ளார் ரஜினி. இதையடுத்து ஜெயிலர் திரைப்படம் ஒரு பான் இந்திய படமாக உருவெடுத்துள்ளது. இதையடுத்து இதுவரை ஜெயிலர் படத்திலிருந்து வெளியான போஸ்டர் மற்றும் கிலிம்ப்ஸ் வீடியோ ரசிகர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பை பெற்றது. எனவே இப்படத்தின் மூலம் மீண்டும் பழைய ரஜினியாக கம்பாக் கொடுப்பார் என அவரது ரசிகர்களால் நம்பப்படுகின்றது. இந்நிலையில் ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் மிகப்பிரமாண்டமாக வெளியாக இருக்கின்றது
தலைவர் 170 இந்நிலையில் சிபி சக்கரவர்த்தி தான் ரஜினியின் 170 ஆவது திரைப்படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரின் கதையில் ரஜினிக்கு உடன்பாடில்லாத காரணத்தால் தற்போது ஜெய் பீம் படத்தை இயக்கிய ஞானவேலை தன் அடுத்த பட இயக்குனராக தேர்வு செய்துள்ளார்
ரஜினி. இதன் அறிவிப்பு சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் இப்படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடிப்பதாகவும், ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாக இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. மேலும் இப்படத்தில் ரஜினி ஒரு இஸ்லாமியரின் கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். பாட்ஷா படத்திற்கு பிறகு ரஜினி இப்படத்தில் இஸ்லாமிய கதாபாத்திரத்தில் நடிப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதே போல ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்து வரும் லால் சலாம் படத்திலும் அவர் இஸ்லாமிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வந்தது குறிப்பிடத்தக்கது