மும்பை: பேங்க் ஆப் மகாராஷ்டிராவில் கடன் வழங்கி மோசடியில் ஈடுபட்ட முன்னாள் உதவிப் பொது மேலாளர் திலீப் தேஷ் பாண்டே (74) மற்றும் 8 பேருக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை, ரூ.5 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்புவழங் கப்பட்டுள்ளது.
தேஷ் பாண்டே உதவி பொது மேலாளராக (ஏஜிஎம்) இருந்தபோது கடன் வழங்கியதில் ரூ.7 கோடிக்கு மேல் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.