கச்சத்தீவை மீட்பதே தமது முதன்மையான நிகழ்ச்சி நிரல்: தமிழக அரசாங்கம்


கச்சத்தீவை மீட்பதே தமது முதன்மையான நிகழ்ச்சி நிரல் என்று தமிழக அரசாங்கம் அறிவித்துள்ளது.

நேற்றைய தினம் (05.04.2023) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் கலந்து கொண்ட தமிழகத்தின் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், கச்சத்தீவை மீட்பதும், பாரம்பரிய மீன்பிடியை மீட்டெடுப்பதும் தமிழக அரசின் முதன்மையான செயல்திட்டமாக இருக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கச்சத்தீவை மீட்பதே தமது முதன்மையான நிகழ்ச்சி நிரல்: தமிழக அரசாங்கம் | Retrieval Of Kachchatheevu Is Topmost Agenda

இலங்கை அரசாங்கம்

தமிழக கடற்றொழிலாளர்கள் சர்வதேச கடல் எல்லைக் கோட்டை கடக்கிறார்கள் என்று காரணத்தைக் காட்டி இலங்கை கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

அத்துடன், அவர்களின் படகுகளை இலங்கை அரசாங்கம் நீண்டகாலமாகத் தடுத்து வைத்துள்ளது.

இது தமிழக கடற்றொழிலாளர் சமூகத்தினரிடையே கவலை மற்றும் பாதுகாப்பின்மை உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, கச்சத்தீவை இந்தியாவுக்குத் திரும்பப் பெறுவதும், பாக்கு நீரணைப்பகுதியில் இந்திய கடற்றொழிலாளர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை மீட்டெடுப்பதும் தமிழக அரசின் முதன்மையான செயல்திட்டத்தில் உள்ளது என்றும் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.