இந்தியாவின் முன்னணி 4 மீட்டருக்கு குறைந்த நீளம் பெற்ற காம்பேக்ட் எஸ்யூவி டாடா நெக்ஸான் உற்பத்தி 5,00,000 எண்ணிக்கை இலக்கை வெற்றிகரமாக கடந்து சாதனை படைத்துள்ளது. கடந்த செப்டம்பர் 2017ல் விற்பனைக்கு நெக்ஸான் வெளியானது.
புதுப்பிக்கப்பட்ட மாடல் தற்பொழுது நெக்ஸான் சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், IC என்ஜின் மட்டுமல்லாமல் இந்த கார் எலக்ட்ரிக் மாடலாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
Tata Nexon SUV
நெக்ஸான் எஸ்யூவி காரில் 1.2L மூன்று சிலிண்டர் ரெவோட்ரான் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5L நான்கு சிலிண்டர் ரெவோடார்க் டீசல் என்ஜின் கொண்டதாக விற்பனை செய்யப்படுகின்றது. 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 120 PS மற்றும் 170 Nm டார்க் வழங்குகின்றது. அடுத்தப்படியாக டீசல் என்ஜின் 110 PS மற்றும் 260 Nm டார்க் வழங்குகின்றது. இரண்டு என்ஜினும் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் ஆறு-வேக AMT பெற்றுள்ளது.
இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகின்ற எஸ்யூவி கார்களில் முன்னணி மாடலாக விளங்கும் நெக்ஸான் கார் கிராஷ் டெஸ்ட் சோதனை முடிவில் 5 நட்சத்தர மதிப்பீட்டை பெற்று அசத்தியுள்ளது.
நான்கு மீட்டர் குறைந்த நீளம் பெற்ற எஸ்யூவி கார்களில் மாருதி சுசூகி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, கியா சோனெட், மஹிந்திரா எக்ஸ்யூவி300, நிசான் மேக்னைட் மற்றும் ரெனால்ட் கிகர் ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது.
2023 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட டாடா கர்வ் எஸ்யூவி காரின் அடிப்படையில் புதிய நெக்ஸான் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் விற்பனைக்கு ஆகஸ்ட் மாத் வெளியாகலாம்.
தற்போதைய மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலையான ரூ.7.80 லட்சம்- ரூ. 14.35 லட்சத்தை விட சற்று கூடுதலாக விலை அமைந்திருக்கலாம்.