தமிழ்நாடு முழுவதும் கடந்த 10 நாட்களில் 72 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மருத்துவம் படிக்காமல், அரசால் அங்கீகரிக்கப்படாத மாற்று மருத்துவ முறையில் மருத்துவ தொழில் செய்து வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
எனவே போலி மருத்துவர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணிகளை சுகாதாரத் துறை இணை இயக்குநர்களுடன் இணைந்து, காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, தமிழ்நாடு முழுவதும் கடந்த 10 நாட்களில் 72 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாகத் திருவாரூர் மாவட்டத்தில் 12 போலி மருத்துவர்களும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 10 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 8 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தனை போலி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in