ராயல் என்ஃபீல்டு நிறுவனம் நடுத்தர மோட்டார்சைக்கிள் சந்தையில் முன்னணியாக உள்ள நிலையில் எலக்ட்ரிக் பைக் மாடலை தயாரிக்கும் முயற்சியில் தீவரமாக களமிறங்கியுள்ளது. இதற்காக திருவண்ணாமலையில் உள்ள செய்யாறு பகுதியில் 60 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியுள்ளது.
எதிர்காலத்தில் இந்நிறுவனத்தின் இரு சக்கர EV மாடல்களை தயாரிக்கும் முக்கிய உற்பத்தி மையமாக விளங்கும். ராயல் என்ஃபீல்டு அடுத்த 12 முதல் 24 மாதங்களில் ரூ.1,000 முதல் ரூ. 1,500 கோடி வரை தனது தயாரிப்பு போர்ட்ஃபோலியோ மற்றும் உற்பத்தி திறன் என இரண்டையும் விரிவுபடுத்துவதற்கு முதலீடு செய்ய வாய்ப்புள்ளது.
ராயல் என்ஃபீல்டு எலக்ட்ரிக் பைக்
முதல் மின்சார மோட்டார் சைக்கிள் மாடலை, தற்போதுள்ள ராயல் என்ஃபீல்டு வல்லம் வடகல் ஆலையில் உள்ள பிரத்யேக அமைப்பிலிருந்து தயாரிக்க வாய்ப்புள்ளது, இது இந்நிறுவனத்தின் முக்கிய ஐசி இன்ஜின் உற்பத்தி ஆலையாக உள்ளது.
ராயல் என்ஃபீல்டு இரண்டு மின்சார இரு சக்கர வாகன கட்டுமானத்தை உற்பத்தி செய்ய உள்ளது. உள்நாட்டில் ஒன்று ‘L1A’ என்ற குறியீடு பெயருடன் மற்றொன்று ஸ்டார்க் மோட்டார்சைக்கிள் எனப்படும் ஸ்பானிஷ் EV ஸ்டார்ட் அப் உடன் இணைந்து செயல்படுகிறது. L1A இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட மின்சார பைக் ஆனது இந்திய சந்தைக்கு மட்டுமல்லாமல் சர்வதேச சந்தைகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும்.
என்ஃபீல்டு நிறுவனம் செய்யாறில் புதிய ஆலைக்காக 60 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியுள்ளதால் இந்த இடத்தில் தொழிற்சாலை 2025 ஆம் ஆண்டிற்குள் தயாராகும்.