மலையகத்தில் பல்கலைக்கழகம் ஒன்றை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார் என்று நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் மாவட்ட செயலகத்தில் நேற்று (10) நடைபெற்றது. இதன்போது, பல்கலைக்கழக விவகாரம் தொடர்பில் நான் ஜனாதிபதியிடம் கோரிக்கை ஒன்றை விடுத்தேன். அதற்கினங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த கோரிக்கையை விடுத்துள்ளார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.